பக்கம் எண் :

233

சங்கு இவைகளால் ஆக்கப்பெற்றுள்ளது. இவர்க்கு ஆண்டுதோறும்
ஆவணி மாதத்துச் சதுர்த்தியில் ஒரு ஆடம்தேன் அபிடேகம் நடைபெற்று
வருகின்றது. அவ்வளவு தேனும் அவர் திருமேனியில் சுவறி விடுகின்றது.

     இங்குத் தட்சிணாமூர்த்திக்குத் தனிக்கோயில் சந்நிதியில் இருக்கிறது.
வணிகப் பெண்ணின் பொருட்டுச் சிவபெருமான் மதுரை சென்று சாட்சி
பகர்ந்ததை உணர்த்தும் நாடகம் ஒன்று இவ்வூரில் வைகாசிமாதத்தில்
நடைபெறுகின்றது. அதை மக்கள் ‘வன்னி நாடகம்’ என்று கூறுகின்றனர்.

     இக்கோயில் பணிமகளாராகிய ஒரு அம்மையார் ஆதனூரில் உள்ள
தம் காதல் கிழவனிடம் ஒரு நாள் மாலைப்பொழுதில் செல்லும் பொழுது
மண்ணியாற்றில் ஓடம் விட்டவன். யாரும் இல்லாத நிலையை உணர்ந்து,
அவ்வம்மையாருடைய அணிகலன்கள், கூறைகள் முதலியவைகளைப்
பறித்துக்கொண்டு, அவளைக்கொன்று ஆற்றில் தள்ளிவிட்டான். ஆற்றைக்
கடப்பதற்குள் அவனும் தவறி ஆற்றில் விழுந்து இறந்துவிட்டான்.

     இவ்வரலாற்றை உட்கொண்டுதான், நிறைமொழி மாந்தராகிய
சுந்தரமூர்த்தி சுவாமிகள்,

“குற்றொ ருவரைக் கூறை கொண்டு
     கொலைகள் சூழ்ந்த களவெலாஞ்
 செற்றொ ருவரைச் செய்த தீமைக
     இம்மை யேவருந் திண்ணமே”

என (தி. 7 பதி. 35 பா. 4) அருளியுள்ளார்கள் என்பார்கள்.

     இவ்வூர்ச் சிவபெருமான், மதுரை சென்று சாட்சிபகர்ந்த வரலாற்றுக்
குறிப்பு, சிலப்பதிகாரத்தில்

“வன்னிமரமும் மடைப்பளியும் சான்றாக
 முன்னிறுத்துக் காட்டிய மொய்குழலாள்”

எனக் குறிக்கப்பட்டுள்ளது.

     இவ்வூர்க்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று, திருநாவுக்கரசர்
பதிகம் ஒன்று, சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிகம் ஒன்று ஆக மூன்று