|
பதிகங்கள் இருக்கின்றன.
மாணிக்கவாசகர்,
புறம் பயமதனில் அறம்பல அருளியும் என
இவ்வூரைப் பாடியுள்ளனர். இக்கோயில் மதுரைத் திருஞான சம்பந்த
சுவாமிகள் ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது.
கல்வெட்டு:
இந்தக் கோயிலில்
11 கல்வெட்டுக்கள்1 படி எடுக்கப்பட்டன. எல்லாம்
சோழர் கல்வெட்டுக்களே. இராஜகேசரி வர்மன் முதல், குலோத்துங்கன்
வரை. அதாவது (கி. பி. 10-11) நிலதானங்கள் விளக்குக்களுக்காக
நிலதானங்கள் விளக்குகளுக்காக நிலதானம், பொன்தானம், விளக்குத்தானம்,
விளக்குக்காகப் பசுதானம், ஆடு தானம் முதலியன கூறப்பெற்றுள்ளன.
இராஜகேசரிவர்மன்
காலத்தில் ஆலய பண்டாரத்தில் பெற்ற
மிச்சப் பொருளினால் பொன்னாபரணங்கள், வெள்ளிப் பாத்திரங்கள்
செய்யப்பட்டன. இராஜேந்திரன் காலத்தில் திருப்புறம்பயத்து
ஆதித்தேசுவரருக்கு 10 விளக்குக்களுக்காகப் பொன்தானம் செய்யப்பட்டது
என்று கூறும் கல்வெட்டினால் இக்கோயிலின் மூர்த்தியின்பெயர்
ஆதித்தேசுவரர் என்றும் இக்கோயிலை ஆதித்த சோழன் கட்டியிருக்கலாம்
என்றும் ஊகிக்கலாம்.
உதயேந்திரச்
செப்பேட்டின் படி கங்க அரசன் பிருதிவிபதிக்கும்
வரகுண பாண்டியனுக்கும் நடந்த போரில் கங்க அரசன் உயிர்நீத்தான்.2
இந்நாட்டின்
பெயர் இராஜேந்திரசிம்ம வளநாட்டு அண்டாற்றுக்
கூற்றம் என்றும் காணக்கிடக்கிறது.
இத்திருக்கோயிலில்
முதலாம் பராந்தகன், இரண்டாம் ஆதித்தன்,
முதலாம் இராஜராஜசோழன், முதற் குலோத்துங்க சோழன்,
1See
the Annual Reports on South Indian Epigraphy for the
year 1897, No. 323-357; year 1932, No. 146-151.
See
also South Indian Inscriptions, Vol. VI, 18-32.
See
also தமிழ்ப் பொழில்
2See
South Indian Inscriptions, Vo. I, 381.
|