பக்கம் எண் :

235

விக்கிரமசோழன், மூன்றாம் இராஜராஜசோழன், மூன்றாம் இராஜேந்திர
சோழன் என்னும் பிற்காலச் சோழ மன்னர்களின் காலங்களில்
பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் அறுபத்திரண்டும், விசயநகர வேந்தனாகிய
விரூபாட்சிராயன் காலத்தது ஒன்றும் ஆக அறுபத்து மூன்று கல்வெட்டுக்கள்
இருக்கின்றன.

     இவைகளுள் முதற் பராந்தகசோழன் காலத்துக் கல்வெட்டு,
இக்கோயிலுக்கு ஆதித்தேச்சுரம் என்னும் பெயர் உண்மையைப்
புலப்படுத்துகின்றது. கோயில் திருவிசைப்பாப் பதிகம் பாடிய முதல்
கண்டராதித்த சோழதேவரது மனைவியராகிய செம்பியன் மாதேவியார்
புறம்பயத்து இறைவர் நீராடியருளுவதற்கு வெள்ளிக் கலசம் ஒன்றை
அளித்துள்ளனர். இரண்டாம் ஆதித்தசோழன் காலத்தில் இருமடிசோழப் பெரும்படையினர், நந்தவனத்தின் பொருட்டு ஆறு மா நிலம் விட்டுள்ளனர்.

     வானவன் மூவேந்த வேளான் என்பான் இத்திருக்கோயிலில்
அஷ்டபரிவார தேவர்களை எழுந்தருளுவித்து அவர்களுக்கு நாள்வழி
பாட்டிற்கு நிவந்தங்கள் அளித்துள்ளான். பங்குனித் திருநாளுக்கும்,
திருவேட்டை விழாவிற்கும் திருவெள்ளறை நல்லூர் என்னும் ஊரில் முதற்
குலோத்துங்கன் நிலம் அளித்துள்ளான். முடிகொண்ட சோழப் பல்லவரையன்
முத் திறத்து அடிகளுக்கும் நாள் வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளான்.

     மூன்றாங்குலோத்துங்கசோழன் காலத்தில் ஆலங்குடையான் அடிகள்
புறம்பயனும், திருச்சிற்றம்பலமுடையானும் ஆளுடைய நாயகர் கூத்தாடுந்
தேவர், அவர்தம் பிராட்டியார், பிள்ளையார் முத்துமுளைக் கன்று.
அறம்பயந்த பிள்ளையார் இவர்களுக்கு அமாவாசைதோறும் திருமஞ்சனம்
ஆட்டி அருளுவதற்கும் திருவமுதுக்கும் நிலம்கொடுத் துள்ளதோடு
இவ்வேந்தன் காலத்தில் வீதிவிடங்க விழுப்பரையனும் அவன் தம்பி
அகிலநாயக விழுப்பரையனும் மூன்றாம் பிராகாரத்தில் முதல்கோபுர
வாசலடியில் அறம் உரைத்த நாயனாரையும், முதற் பிராகாரத்தில்
திருவலஞ்சுழி இறைவனையும், புற்றிடங் கொண்டாரையும் எழுந்தருளுவித்து,
நாள்வழிபாட்டிற்கு நிலங்களை அளித்த செய்தியும் அறியலாம்.

     மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்தில் குந்தவை நல்லூர்ச் சபையார்
புறம்பயத்து இறைவனுக்கு நிவந்தம் அளித்துள்ளனர். விஜய நகர வேந்தன்
கல்வெட்டு மக விழாவைப்பற்றிக் குறிப்பிடுகின்றது. இவ்வூரில்
ஆண்டார்க்கடியா பரணர் மடம் ஒன்று இருந்தது. தாமோதர