|
விண்ணகரம் என்ற
பெருமாள்கோயில் ஒன்று இருந்தது. இவை போன்ற
பல செய்திகள் இவ்வூர்க் கல்வெட்டுக்களில் காணலாம்.
69.
திருப்புறவார்பனங்காட்டூர்
பனைமரத்தைத்
தலவிருட்சகமாக உடைமையால் பனங்காட்டூர்
என்றும், புறாவின் பொருட்டுத் தன் தசையை அரிந்திட்டசிபிச்
சக்கரவர்த்திக்கு அருள்செய்த பதியாதலின் புறவார் பனங்காட்டூர் என்னும்
பெயர்பெற்றது என்றும் கூறுவர். புறவு என்பதுபற்றிய புனைந்துரையோ?
விழுப்புரம் தொடர்வண்டி
நிலையத்திற்கு வடக்கேயுள்ள முண்டியம்
பாக்கம் தொடர்வண்டி நிலையத்திற்கு வடகிழக்கே 1.5. கி. மீ.
தூரத்திலுள்ளது. விழுப்புரம் (திருக்கனூர் வழி) பாண்டிச்சேரி செல்லும்
பேருந்துகளில் கோயிலை அடையலாம். இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று.
இறைவரது திருப்பெயர்
பனங்காட்டீசுவரர். இறைவியார் திருப்பெயர்
புறவம்மை.
தலவிருட்சம்
பனை.
சூரியன் பூசித்துப்
பேறுபெற்றான். இத்தலத்தில் சித்திரை முதல் தேதி
முதல் ஏழாந்தேதி வரை ஒவ்வொருநாளும் சூரியன் தோன்றும்பொழுது,
சுவாமிமேலும் அம்மன்மேலும் கிரணங்கள் விழுகின்றன.
கல்வெட்டு:
இக்கோயிலில்
மூன்று கல்வெட்டுக்கள் கிடைத்திருக்கின்றன.
குலோத்துங்க சோழன் 1 தனது எட்டாம் ஆண்டில் ஒரு விளக்கிற்காகப்
பணம் கொடுத்துள்ளான்.
இறைவன் பெயர்
திருப்பனங்காடுடைய மகாதேவர் என்று குறிக்கப்
பட்டுள்ளது.
கோனேரின்மைகொண்டான்
(பட்டப்பெயர்) காலத்தில் இக்கோயில்,
திருப்புறவார் பனங்காடுடையார் கோயில் என
|