|
தீர்த்தம் காவிரி.
காளி,
சூரியன், திருமால், பிரமன், அகத்தியர் இவர்களால்
அர்ச்சிக்கப்பெற்றது. இச்செய்தி,
மங்க
லக்குடி யீசனை மாகாளி
வெங்கதிர்ச் செல்வன் விண்ணொடு மண்ணுநேர்
சங்கு சக்கர தாரி சதுமுகன்
அங்க கத்திய னும்மர்ச்சித் தாரன்றே |
என்னும் இவ்வூர்க்கு
உரிய அப்பர் பெருமானின் குறுந்தொகைப் பாடலால்
தெரிகின்றது. இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று அப்பர் பதிகம்
ஒன்று ஆக இரண்டு பதிகங்கள் உள்ளன.
கல்வெட்டு:
இக்கோயிலில்
6 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டுள்ளன.
அவையாவன சோழர் 1, பல்லவர் 1, விஜய நகரத்தரசன் 1,
மற்றையவற்றிற்குப் பெயரில்லை.
சோழர்களில்
இராஜராஜன் 24 ஆம் ஆண்டுக் கல்வெட்டில் முந்திய
ஆண்டில் பஞ்சம் ஏற்பட்டதால் கோயில் சொத்தைச் சூறையாடிய சிலரை
நீதிபதிகள் பரிகாரங் கேட்டதை அறிகிறோம்.
பல்லவன்
கோப்பெருஞ்சிங்கன் 25 ஆம் ஆண்டில் இக்கோயிலுக்கு,
பெருங்கலம் தொண்டைமான் நிலம் வாங்கித் தருமம் செய்தான்.
கிருஷ்ணதேவராயர் 1439 சகம் ஆண்டில் கோயில்களுக்கு வரி தள்ளுபடி
செய்தார். சுங்கந்தவிர்த்த குலோத்துங்கன் தனது 16ஆம் ஆண்டில்
கோயிலுக்குச் சில வரிகள் விதித்து அவைகளை அளித்தான்.
இத்திருக்கோயிலில்
சோழர்களுள் திருபுவனச் சக்கரவர்த்தி
இராஜராஜதேவர், திருபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான்,
இவர்கள் காலங்களிலும், பிற்காலப் பல்லவர்களில் சகல புவனச்
சக்கரவர்த்தி கோப்பெருஞ்சிங்கதேவர் காலத்தி்லும், விஜய நகர அரசர்களில்
வீரப்பிரதாப கிருஷ்ணதேவ மாராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற
கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
இவற்றுள்
இராஜராஜதேவரின் கல்வெட்டு, அவ்வரசனின்
|