|
திருஎதிர்கொள்பாடி
என்பன.
விளக்குக்காகப்
பணதானம் 1000, சில யோகிகள், தவசிகள்
ஆண்டுக்கொருமுறை பங்குனி மாதத்தில் உணவுக்காக நிலதானம்,
கோயிலுக்கு நிலதானம் (4-5-1045) சபையார் நிலதானம், (7-2-1123)
திருமந்திர ஓலை சொற்படி நிலதானம், விளக்குக்காக 96 ஆடு தானம்,
கோயிலுக்குப் பொன்கிரீடம், உடைய பிராட்டியார் சொற்படி சந்தனம், துணி,
எண்ணெய், திருவிளக்குக்காக 16 கழஞ்சு பொன் தானம், கோயிலில்
தினப்படி பூசைக்குத் திட்டம், விளக்குக்கும் அதன் பீடத்திற்கும்,
எண்ணெய்க்குமாக 96 ஆடு தானம், விளக்குப் பீடம் இவைகளுக்கு 45 காசு
தானம், முழவு, விளக்கு, மணி, மூர்த்தி இவைகள் தானம், கல்தானம் இரவு
விளக்குத் தானம், குகைகட்டப் பணமும் நிலமும் தானம் முதலியன.
இங்கிருந்த திருமாலைக்
கரிகால்சோழ விண்ணகராழ்வான் என்பர்.
கோயில் பெயர் மணவாளப்பெருமாள் அதன் அதிகாரியின் பெயர்
கந்தாடை நம்பி திருமணஞ்சேரி பிச்சன் என்பான் திருப்பணி செய்தான்.
கல்வெட்ட ஒரு கல்லும் கொடுக்கப்பட்டது. கோயிலில் குடமுழா வாசிப்பவர்
பெயர் கூறப்பட்டுள்ளது.
உடைய
பிராட்டி செம்பியன் மாதேவியார் கோயில் செலவு
திட்டங்களை ஏற்படுத்தினார். நல்லமநாயக்கர் கோபுரம் கட்டினார். ஒரு
கல்வெட்டில் அக்கினி புராண சுலோகங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஆதித்த
தேவன் நாச்சியம்மன் கோயில் கட்டுவதற்கும் ஆலாலசுந்தரம் குகை
கட்டுவதற்கும் பணமும் நிலமும் கொடுத்தார்.
73.
திருமயிலாப்பூர்
உமாதேவியார்
மயில் உருவமாய் இறைவனைப் பூசித்த காரணம்பற்றி
இப்பெயர்பெற்றது. இது மயிலாப்பு என்றும் தேவாரத்தில் கூறப்பெற்றுள்ளது.
மயிலார்ப்பூரோ? மயில் யாப்பூரோ?
சென்னையின்
தென்பகுதியில் விளங்குவது இத்தலம். சென்னைக்குத்
தெற்கே 6 கி. மீ. தூரத்தில் இருக்கிறது. சென்னையின் நகரப் பேருந்துகளில்
அனைத்து இடங்களிலிருந்தும் மயிலாப்பூர் செல்லலாம்.
இறைவரது
திருப்பெயர் கபாலீசுவரர். இறைவியார்
|