பக்கம் எண் :

99

நாயனார் வாழ்ந்த பதி. இத்தலத்து வேளாளர்களைத் திருஞான சம்பந்தப்
பெருந்தகையார் இவ்வூர்ப் பதிகத்தில்,

“வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும்
 தாளாள ராக்கூரிற் றான்றோன்றி மாடமே”

எனச் சிறப்பித்திருப்பது பெருமகிழ்ச்சியைத் தருவதாகும்.

கல்வெட்டு:

     இத்திருக்கோயிலில், சோழ மன்னர்களில் இரண்டாம் இராஜாதிராஜன்,
திருபுவனச் சக்கிரவர்த்தி இராஜராஜ தேவன், இவர்கள் காலங்களிலும்,
பல்லவமன்னருள், கோப்பெருஞ் சிங்கன் காலத்திலும், விசயநகர
பரம்பரையில் வீர கிருஷ்ண தேவராயர் காலத்திலும், பொறிக்கப்பெற்ற
ஆறு கல்வெட்டுக்கள் இருக்கின்றன.1 இவைகளுள் சிவபெருமான்,
திருத்தான்தோன்றி மாட முடையார் என்னும் பெயரால் வழங்கப்படுகின்றனர்.

     ஆக்கூர், இராஜேந்திரசோழ சதுர்வேதி மங்கலத்திற்கு உட்பட்டிருந்தது.
ஊர் அலுவல்களைப் பெருங்குடி மக்கள் கவனித்து வந்தனர். இவர்கள்
கூட்டப் பெருமக்கள் எனவும் திருபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரின்
பதினெட்டாம் ஆண்டுக் கல்வெட்டில் கூறப்பெறுகின்றனர்.

     இத்திருக்கோயிலில் வைகாசி மாதத்தில் திருவிழா நடந்து வந்தது.
விழாமுடிவில் பெருமான் தீர்த்தமாடுதற்குக் காவிரிக்கு எழுந்தருளுவது
உண்டு.

     இங்ஙனம் எழுந்தருளுவதற்குப் பெருவழி இன்மையால் அதைப்
புதிதாக அமைக்க வேண்டுமென்று கும்ப ஞாயிறு முதல்
ஊர்க்காரியங்களைக் கவனிக்கும் கூட்டப் பெருமக்கள் ஏற்பாடு செய்ததை
ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.

     அழகிய பல்லவர் அரையராகிய வீரப்பிரதாபர், ஹொய்சலர்களைச்
சிறையிலடைத்தும், பாண்டிய மன்னரிடம் கப்பம் வாங்கியும்,


     1See the Annual Reports on South Inidan Epigraphy for the
year ending 31st March 1925. No. 224-229.

     குறிப்பு: 230-231 பெருமாள் கோயிலைப் பற்றியதாகும்.