3821. |
யாழ்நரம்
பின்னிசை யின்னம்பர் மேவிய |
|
தாழ்தரு
சடைமுடி யீரே
தாழ்தரு சடைமுடி யீருமைச் சார்பவர்
ஆழ்துய ரருவினை யிலரே. 2 |
3822. |
இளமதி
நுதலியொ டின்னம்பர் மேவிய |
|
வளமதி
வளர்சடை யீரே
வளமதி வளர்சடை யீருமே வாழ்த்துவார்
உளமதி மிகவுடை யோரே. 3 |
கருத்தும் இங்கே ஒப்பிடத்
தக்கது.
2.
பொ-ரை: யாழின் இனிய இசையை உடைய திருஇன்னம்பர்
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நீண்ட தாழ்ந்த
சடைமுடியுடைய சிவபெருமானே! நீண்டு தாழ்ந்த சடைமுடியுடைய உம்மைச்
சார்ந்து பக்தியுடன் வழிபடுபவர்கள் பெருந்துன்பத்திலிருந்தும், அதற்குக்
காரணமான அரிய வினையிலிருந்தும் நீங்கியவராவர்.
கு-ரை:
யாழின் நரம்பிசை முதலிய பலவாத்திய ஓசைகளையுடைய
திருவின்னம்பர் என்பது முதலடியின் கருத்து. காண்க: குழலொலி
யாழொலிகூத்தொலியேத்தொலி யெங்கும் குழாம் பெருகி. (தி.9
திருப்பல்லாண்டு. 11) சார்பவர் - சார்புணர்ந்து சார்புகெடச் சார்பவர்,
பெருந்துயர் நேரினும் அதினின்றும் நீங்கப்பெறுதலோடு அதற்குக்
காரணமாகிய அரிய வினையும் இல்லாதவர் ஆவார்கள். ஆழ்துயர் -
பெருந்துயர்.
3.
பொ-ரை: பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியையுடைய
உமாதேவியோடு திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, குளிர்ச்சிபொருந்திய சந்திரனை அணிந்த நீண்ட
சடையுடைய சிவபெருமானே! குளிர்ச்சி பொருந்திய சந்திரனை அணிந்த
நீண்ட சடையுடைய உம்மை வாயால் வாழ்த்தி வழிபடுவோர்
பேரறிவுடையவராவர்.
கு-ரை:
இளமதி - பிறைச்சந்திரன் போன்ற. நுதலி - நெற்றியை
உடைய அம்பிகை. வளம் மதி - தன்னொளி, அமுத கிரணமாயிருத்தல்,
பயிர் பச்சைகளை வளர்த்தல், கடல் கொந்தளிப்பித்தல் முதலிய
வளங்களையுடைய மதி. வளர் - தங்குகின்ற என்னும்
|