3868. |
முத்தி
தருமுயர் முதுகுன்ற மேவிய |
|
பத்து
முடியடர்த் தீரே
பத்து முடியடர்த் தீருமைப் பாடுவார்
சித்தநல் வவ்வடி யாரே. 8 |
3869. |
முயன்றவ
ரருள்பெறு முதுகுன்ற மேவியன் |
|
றியன்றவ
ரறிவரி யீரே
இயன்றவ ரறிவரி யீருமை யேத்துவார்
பயன்றலை நிற்பவர் தாமே. 9 |
கு-ரை:முருகு
- வாசனை, உரு அமர் - அழகு பொருந்திய. திரு -
ஐசுவரியம். தேசு - தேஜஸ், புகழ்.
5,6,7.
* * * * * * * *
8.
பொ-ரை: முத்தியைத் தருகின்ற உயர்ந்த திருமுதுகுன்றம் என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், இராவணனின் பத்துத்
தலைகளையும் அடர்த்தவருமான சிவபெருமானே! இராவணனின் பத்துத்
தலைகளையும் அடர்த்த உம்மைப் பாடுவார் அழகிய சித்தமுள்ள
அடியவர்களாவார்கள்.
கு-ரை:
முடிபத்தும் என்க. சித்தம் நல் - நல்ல சித்தமுடைய அடியவர்.
9.
பொ-ரை: தவநெறியில் முயல்பவர்கள் அருள்பெறுகின்ற
திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
அன்று தம் செருக்கால் காணத் தொடங்கிய பிரமன், திருமால் இவர்களால்
காண்பதற்கு அரியவராக விளங்கிய சிவபெருமானே! பிரமனும், திருமாலும்
அறியவொண்ணாதவராகிய உம்மைப் போற்றி வழிபடுவர்கள் சிறந்த
பயனாகிய முத்தியைத் தலைக்கூடுவர்.
கு-ரை:
முயன்றவர் - தவம் புரிந்தோர் தவம் முயல்வார் என
வந்தமை (திருமுறைப் பதிகம்) அறிக. இயன்றவர் - தம் செருக்காற் காணத்
தொடங்கிய பிரம விட்டுணுக்களால் அறிவரியீர். பயன்தலை நிற்பவர் -
பயன்பெறுவர்.
|