பக்கம் எண் :

1260திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

4010. பறைகொள்பாணியர் பிறைகொள்சென்னியர்
       பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திறைவரா யிருப்பார்
     இவர்தன்மை யறிவாரார்.               10

4011. வானமாள்வதற் கூனமொனறிலை
       மாதர்பல்லவ னீச்சரத்தானை
ஞானசம்பந்தன் நற்றமிழ்
     சொல்லவல்லவர் நல்லவரே.            11

 திருச்சிற்றம்பலம்


மேனியாகக் கொண்டவர். நறுமணம் கமழும் கொன்றை மாலையை
அணிந்துள்ளவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் தலைவனாய்
விரும்பி வீற்றிருந்தருளுபவன். இவன் தன்மை யார் அறிவார்?

     கு-ரை: படிகொள் - பல்வேறு வடிவங்களில் திருவுடம்பு கொள்பவர்.
கடி - வாசனை.

     10. பொ-ரை: இறைவன் பறை என்னும் இசைக்கருவியை உடையவன்.
பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்துள்ளவன். காவிரிப்பூம்பட்டினத்துப்
பல்லவனீச்சரத்தில் யாவர்க்கும் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன்.
இவர் தன்மை யார் அறிவார்?

     கு-ரை: பறை - வாத்தியம்.

     11. பொ-ரை: அழகிய காவிரிப்பூம்பட்டினப் பல்லவனீச்சரத்து
இறைவனைப் போற்றி, ஞானசம்பந்தன் அருளிய இந்நற்றமிழ்த் திருப்
பதிகத்தை ஓத வல்லவர்கள் நற்குணங்கள் வாய்க்கப் பெறுவர். அவர்கள்
மறுமையில் வானுலகை ஆள்வதற்குத் தடையொன்றுமில்லை.

     கு-ரை: ஊனம் - தடை. மாதர் - அழகிய.