பக்கம் எண் :

1262திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

4013. சதிமிக வந்த சலந்தரனே
       தடிசிர நேர்கொள் சலந்தரனே
அதிரொளி சேர்திகி ரிப்படையா
     லமர்ந்தன ரும்பர்து திப்படையால்
மதிதவழ் வெற்பது கைச்சிலையே
     மருவிட மேற்பது கைச்சிலையே
விதியினி லிட்டவி ரும்பரனே
     வேணு புரத்தை விரும்பரனே.           2


காய்வது - வெறுப்பது. கா - காத்திருந்த. மனையே - மனைவி
முதலியவற்றையே; என்றது மனைவி முதலிய மூவகை ஏடணையையும்.
கனல்விழி - நெற்றிக்கண். காய்வது - எரித்தது. காமனையே - மன்
மதனையே. முன்பக்கத்தில் படம்விரித்துக் கோவணமாகத் தங்கி. அற்றம்
மறைப்பது - உனது மானத்தைக் காப்பது. பணியே - பாம்பே. அமரர்கள்
செய்வதும் உன் பணியே - உனது பணிவிடையேயாம். பெற்று முகந்தது
கந்தனையே - பெற்று வாரி எடுத்து அணைத்தது முருகக் கடவுளையே.
காமன் - உடற் பற்றுக்கு ஆகுபெயர். காவடி போல உடம்பைக் குறித்தது,
சுமக்கும் மனை என்பதால்.

     2. பொ-ரை: வஞ்சனை செய்து வந்தவன் சலந்தரன் என்னும்
அசுரனே. அவன் தலையை வெட்டியவன் கங்கையைத் தாங்கிய அரன்.
கண்டவர்கள் நடுங்கத்தக்க ஒளிபொருந்திய சக்கராயுதத்தால் சலந்தனைக்
கொல்லத் தேவர்கள் துதித்து மகிழ்ந்தனர். சந்திர மண்டலத்தை அளாவிய
மேருமலை, கையிலேந்திய வில்லாம். பொருந்திய நஞ்சை உணவாக ஏற்பதில்
வெறுத்திலீர். விதிக்கப்பட்ட அறவழியில் உலகவர் ஒழுகுவதில்
விருப்பத்தையுடைய பெரிய மேலான கடவுளே. வேணுபுரம் என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் அரனே!

     கு-ரை: சதி - வஞ்சனை. சலந்தரன் - சலந்தரனை. தடிசிரம் -
தலையைவெட்டுவதற்குரிய. சலந்தரனே - வஞ்சகத்தையுடையவனே!
வஞ்சகமாவது காலால் சக்கரம்போல் கோடுகிழித்து அதை எடுக்கச்
சொல்லியது. அதிர் - கண்டார் நடுங்கத் தக்க. திகிரிப் படையால் -
அச்சலந்தரனைக் கொன்ற சக்கராயுதத்தால். உம்பர் - தேவர்கள். துதிப்பு -
துதித்தல். அமர்ந்தனர் - மகிழ்ச்சியுற்றனர். அடை - முதல் நிலைத்
தொழிற்பெயர். மதிதவழ் வெற்பது கைச்சிலையே - சந்திர மண்டலத்தை
அளாவிய மேரு மலை, கையிலேந்திய வில்லாம்.