பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)113. திருக்கழுமலம்1263

4014. காதம ரத்திகழ் தோடினனே
       கானவ னாய்க்கடி தோடினனே
பாதம தாற்கூற் றுதைத்தனனே
     பார்த்த னுடலம் புதைத்தனனே
தாதவிழ் கொன்றை தரித்தனனே
     சார்ந்த வினைய தரித்தனனே
போத மமரு முரைப்பொருளே
     புகலி யமர்ந்த பரம்பொருளே.          3


மரு(வு)விடம் ஏற்பது கைச்சிலையே - பொருந்திய நஞ்சை உணவாக
ஏற்பதில் வெறுத்திலீர். விதியினில் - விதித்த முறையில் உலகர் ஒழுகுவதில்.
இட்ட(ம்) - விருப்பத்தை உடைய. இரும் - பெரிய. பரனே - மேலான
கடவுளே! இட்டம் + இரும்பரன் - மவ்வீறொற்றொழிந்து உயிரீறு ஒத்தது.
(நன்நூல். 219.) இட்டு அவிரும் எனலே தகும். வேணுபுரத்தை விரும்பு
அரனே - வேணுபுரத்தை விரும்புகின்ற சிவபெருமானே.

     3. பொ-ரை: இறைவர் காதில் தோட்டை அணிந்தவர். வேடுவனாகி
மிக விரைந்து சென்றவர். யமனைக் காலால் உதைத்தவர். அர்ச்சுனனது
உடலைக் கவசம் போல் மூடினவர். மகரந்தத்தோடு மலர்ந்த கொன்றையை
அணிந்தவர். அன்பர்களின் வினைகளை அழித்தவர். சிவஞானக் கருத்
தடங்கிய உபதேச மொழியின் பொருளாயுள்ளவர். அவரே திருப்புகலி
என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் பரம்பொருள்.

     கு-ரை: புகலியை அமர்ந்த - விரும்பி யுறைகின்ற பரம் பொருளே -
கடவுளே. காது அமரத்திகழ்தோடினனே - காதில் பொருந்த விளங்குகின்ற
தோட்டையணிந்தவர். கானவன் ஆய் - வேடுவனாகி. கடிது ஓடினனே -
மிக விரைந்து சென்றவர். (பாதம் அதால்) கூற்று - யமனை உதைத்தனனே.
பார்த்தன் - அருச்சுனனது. உடல் - உடம்பை. அம்பு தைத்தனனே - அம்பு
தொடுத்து அதனால் கவசம்போல் மூடினவர். தாது அவிழ் - மகரந்தத்
தோடு மலர்ந்த. தன் அன்பர்களுக்கு சார்ந்த - பொருந்திய. வினை (அது)
அரித்தனனே - கொன்று