பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)113. திருக்கழுமலம்1267

4018. ஓர்வரு கண்க ளிணைக்கயலே
       யுமையவள் கண்க ளிணைக்கழலே
ஏர்மரு வுங்கழ னாகமதே
     யெழில்கொளு தாசன நாகமதே
நீர்வரு கொந்தள கங்கையதே
     நெடுஞ்சடை மேவிய கங்கையதே
சேர்வரு யோக தியம்பகனே
     சிரபுர மேய தியம்பகனே.              7


சடாபாரத்தில் மேகங்கள் இருப்பதைக் குறித்தது. இதனைத் திருவிளையாடல்
நான்மாடக்கூடலான படலத்தால் அறிக. மின் - மின்னலை. நிகர்கின்றதும் -
ஒப்பதுவும். அம்சடையே - அழகிய சடையே. தக - தகுமாறு. விரதம் -
மனத்தையடக்கல் முதலிய விரதங் காத்தலை. கொள்வர் - பாராட்டியேற்றுக்
கொள்பவராகிய சுந்தரர். கொள்வர் - இவ்வுலகிற்குத் தலைவர்.
“விரதமெல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்” எனவும், “விரதங்
கொண்டாட வல்லானும்” எனவும் வரும் அப்பர் திருவாக்கிலும் ஒலிக்கிறது.
வசுந்தரர் எனற்பாலது சுந்தரர் என நின்றது முதற்குறை. உலகத்தை
உடையவர் என்று பொருள். தக்க தராய் - பூந்தராய். உறை - வீற்றிருக்கும்,
சுந்தரர் அழகர்.

     7. பொ-ரை: இறைவனையும், அடியாரையும் காணாத கண்கள்
புறம்பானவை. உமாதேவியின் கண்கள் இரு கயல்மீன்கட்கு ஒப்பானவை.
அழகிய திருவடிகளில் கட்டியிருப்பது நாகத்தையே. அவருடைய
திருமேனியானது நெருப்பு வண்ணம் உடையது நீர்மயமான கொத்தான
கூந்தல் ஒழுங்காய் உள்ளது. நெடுஞ்சடையில் தங்கியுள்ளது, கங்கையே.
சேர்தற்கரிய யோகநிலையைக் காட்டிய மூன்று கண்களையுடையவரே.
நெருப்பாகிய அம்பைக் கையின் இடத்துக்கொண்டு சிரபுரம் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்து அருளுகின்றார்.

     கு-ரை: ஓர்வு அரு கண்கள் - மாலற நேயம் மலிந்தவர் வேடத்தை
அரனென நினைக்காத கண்கள். இணைக்க - அன்பரொடு மருவுதற்கு.
அயல் - புறம்பானவை. வேடத்தைக் கண்டு நினைப்பிக்கும் கருவியாகலான்
கண்கள்மேல் வைத்து ஓதினாரேனும், மாந்தர்மேல் வைத்துக் கூறியதாகக்
கொள்க. எனவே வேடத்தை மதியாதவர் திருக்கூட்டத்திற்குப் புறம்பு என்ற
கருத்தாம். உமையவள்