| 4019. |
ஈண்டு
துயிலம ரப்பினனே |
| |
யிருங்க
ணிடந்தடி யப்பினனே
தீண்டல ரும்பரி சக்கரமே
திகழ்ந்தொளி சேர்வது சக்கரமே
வேண்டி வருந்த நகைத்தலையே
மிகைத்தவ ரோடு நகைத்தலையே
பூண்டனர் சேர லுமாபதியே
புறவ மமர்ந்த வுமாபதியே. 8 |
கண்கள், இணைக்கயல்
- இரு மீன்களுக்கு ஒப்பாகும். ஏர் மருவும் - அழகு
பொருந்திய. கழல் - வீரக்கண்டையாக இருப்பது. நாகம் அது - பாம்பாம்.
எழில் கொள் - அழகிய. உதாசனன் - அக்கினி. ஆகம் அது -
திருவுடம்பாக இருப்பது. நீர்வரு - நீர்மயமான. கொந்து அளகம் -
கொத்தான கூந்தல். கையது - ஒழுங்காய் உள்ளது. கங்கையது -
கங்கையாகிய மங்கைக்கு உரியது. ஒரு மங்கையே நீர்மயமாக
இருப்பாளேயானால் அவளது சாங்கமும் நீர்மயமானதே என்று கொள்வதற்கு
நீர்வரு கொந்தளகம் என்று கூறினார். சேர்வரு - சேர்தற்கரிய. யோகம் -
யோகநிலையைக் காட்டிய. தியம்பகன் - மூன்று கண்களை உடையவன்.
தியம்பகன் - திரியம்பகன் என்பதன் மரூஉ. சிரபுரம், மேய - எழுந்தருளிய.
தீ - நெருப்பாகிய. அம்பு - அம்பைக்கொண்ட. அகன் - கையினிடத்தை
உடையவன். தீ - குறுக்கல் விகாரமாய் தி என நின்றது. அகம் - இடம்.
8.
பொ-ரை: பாற்கடலில் துயில் கொள்ளும் திருமால், தமது பெரிய
கண்ணைத் தோண்டிச் சிவபெருமானின் திருவடிகளில் அர்ச்சித்தனர்.
தீண்டுதற்கரிய தன்மையுடைய அந்தக் கரத்தில் ஒளியுடையதாய் விளங்குவது
சக்கரமே. தாருகாவனத்து முனிவர்கள் விரும்பி யாகம் செய்து சிரமப்படச்
சிவனைக் கொல்ல வந்தது நகுவெண்டலை. அம்முனிவர்களைப் பரிகசிப்பது
போல வெண்டலைகளை மாலையாக அணிந்து கொண்டனர். அவர் சேர்வது
எவற்றிலும் சிறந்த அடியார் உள்ளமாகிய இடமாம். புறவம் என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும் அந்த உமாபதியே ஆவார்.
கு-ரை:
ஈண்டு - இங்கே (திருவீழிமிழலையில்). துயில் அமர்
அப்பினன் - கடலில் தூங்கும் திருமால். அப்பு - தண்ணீர், கடலைக்
குறித்தது தானியாகுபெயர். இரு - பெரிய. கண் - கண்ணை. இடந்து -
தோண்டி. அடி - திருவடியின்கண். அப்பினன் - சேர்த்தான். தீண்டல்
|