பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)113. திருக்கழுமலம்1269

4020. நின்மணி வாயது நீழலையே
       நேசம தானவர் நீழலையே
உன்னி மனத்தெழு சங்கமதே
     யொளியத னோடுறு சங்கமதே
கன்னிய ரைக்கவ ருங்களனே
     கடல்விட முண்டக ருங்களனே
மன்னிவ ரைப்பதி சண்பையதே
     வாரி வயன்மலி சண்பையதே.           9


அரு - தீண்டுவதற்கு அரிய. பரிசு - தன்மையுடன். அக்கரம் -
அந்தக்கரத்தில். திகழ்ந்து - விளங்கி. ஒளிசேர்வது - ஒளி உடையதாய்
இருப்பது. சக்கரம் - சக்கர ஆயுதமாம். வேண்டி - (தாருகாவனத்து முனிவர்)
விரும்பி. வருந்த - யாகம் செய்து சிரமப்பட (தோன்றிய) நகைத்தலை -
நகுவெண்டலையானது. அவரோடு - அம்முனிவரோடு. மிகைத்து - மிக்க
மாறுகொண்டு. நகைத்தலையே பூண்டனர் - நகைத்தலை உடையதாக.
பூண்டனர் - தலைக்கண் அணிந்தனர். சிவனைக் கொல்லவந்த நகு
வெண்டலை சிரிப்பது, அம் முனிவரைப் பரிகசிப்பதைப் போலக் காணும்படி
அதனை அணிந்தனர் என்பது கருத்து. புறவு அமர்ந்த உமாபதி, சேரலும் -
சேர்வதும். மா - எவற்றிலும் சிறந்த (அடியார் உள்ளமாகிய). பதி - இடமாம்.
“மலர்மிசை ஏகினான்” (குறள்.3) என்ற திருக்குறளுக்குப் பரிமேலழகர்
உரைத்தது இங்குக் கொள்க.

     9. பொ-ரை: சிவபெருமானே! மணிகட்டிய உன் கோயில் வாசலின்
நிழலையே அருளிடமாகக் கொண்ட நேசமுடைய அடியவர்களிடமிருந்து
நீங்கமாட்டாய். அவர்களின் அடிச்சுவட்டை எண்ணி. மனத்தில் தொழுகின்ற
அடியவர்கள் விளங்குகின்ற இடமே அடியவர் திருக்கூட்டம் எனத்தகும்.
அவர் தாருகாவனத்தில் வாழும் மகளிர் உள்ளத்தைக் கவர்ந்த கள்வர்.
கடலில் எழுந்த விடத்தை உண்ட கரிய கண்டத்தர். அப்பெருமான்
நிலையாக விரும்பி வீற்றிருந்தருளும் வரையறுத்தலை உடையபதி
சண்பைப்புல்லாலே அழகாகச் சூழப் பட்டதாகிய கடல்வளமும், வயல்
வளமும் உடைய சண்பை நகராகும்.

     கு-ரை: நின்மணிவாயது - உமது ஆராய்ச்சி மணிகட்டிய, கோயிலின்
திருவாயிலினுடைய. நீழலையே - நிழலையே. நேசமது ஆனவர் -
விருப்பமாகக் கொண்டவர்; என்றது திருக்கோயிலில் வழிபாடுசெய்து
வாயிலில் காத்திருக்கும் அடியர் என்றபடி.