| 4021. |
இலங்கை
யரக்கர் தமக்கிறையே |
| |
யிடந்து
கயிலை யெடுக்கிறையே
புலன்கள் கெடவுடன் பாடினனே
பொறிகள் கெடவுடன் பாடினனே
இலங்கிய மேனி யிராவணனே
யெய்து பெயரு மிராவணனே
கலந்தருள் பெற்றது மாவசியே
காழி யரனடி மாவசியே. 10 |
மூவாவுருவத்து முக்கண்
முதல்வ ...... காவாய் எனக் கடைதூங்கும் மணி
என்ற அப்பர் வாக்கின்படி மணிவாய் என்பதற்குப் பொருள் கொள்ளப்
பட்டது. வாய் - வாயில். நீளலை (அவ்வடியவரினின்றும்) நீங்கமாட்டாய்.
உன்னி மனத்து - மனத்தில் உம்மை நினைத்து. எழு - எழுகின்ற. சங்க(ம)ம்
- அடியார். ஒளியதனோடு - சைவ தேஜஸோடு. உறு - வருகின்ற. சங்கமது
- கூட்டமாகும். சங்கம்; சங்கமம் என்பதன் மரூஉ. கடவுள் வெளிப்படும்
நிலைகளாகிய குரு, லிங்க, சங்கமங்களில் ஒன்று. கன்னியரை -
முனிபத்தினியரை. கவரும் - மனம் கவர்ந்த. களன் - கள்ளன். கடல்
விடமுண்ட, கருங்களன் - கரிய கழுத்தை உடையவன்.
10.
பொ-ரை: இலங்கை அரக்கர்கட்கு அரசனான இராவணன்
கயிலையைப் பெயர்த்து எடுக்க, இறைவன் திருப்பாத விரலை ஊன்றக்
கயிலையின் கீழ் நடுக்குண்டு, இந்திரியங்கள் மயங்கச் சோர்ந்து தான்
பிழைக்கும் வண்ணம் இறையருளை வேண்டி உடனே பாடினன். பழைய
செருக்கு நீங்கி, பொறிகள் பக்தி நிலையில் செல்ல அவனுடைய பாடலுக்கு
இறைவன் உடன்பட்டு அருளினன். இரவு போன்ற கரிய நிறத்தை உடைய
அவன் கயிலைமலையின் கீழ் நடுக்குண்டு அழுததனால் உண்டான பெயரே
இராவணன் என்பதாம். இறைவனின் அருளில் கலந்து அவன் பெற்றது
சிறந்த வாளாயுதம். சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
சிவபெருமானின் திருவடி சிறந்த வசீகரத்தை உடையதாகும்.
கு-ரை:
இலங்கை அரக்கர் தமக்கு, இறை - அரசனாகிய இராவணன்.
கயிலை(யை) இடந்து எடுக்க இறையே சிறிதளவில். புலன்கள் கெட -
இந்திரியங்கள் எல்லாம் மயங்கச் (சோர்ந்து). உடன் பாடினனே - (தான்
பிழைக்கும் வண்ணம்) உடனே பாடினன். பொறிகள் - ஐம்பொறி முதலிய
கரணங்கள். கெட - பழைய செருக்கு
|