பக்கம் எண் :

1286திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

115. திருஆலவாய்

பதிக வரலாறு:

     அகத்திருளாகிய அறியாமை கெட உலகில் திரு அவதாரம்
புரிந்தருளிய சண்பை மன்னர், திருவாலவாய்ச் சொக்கநாதரைப் பாடித்
திருநீலகண்டப்பாணர்க்கு அருளிய திறமும் போற்றியது இத்திருப்பதிகம்.

திருவியமகம்
பண்: பழம்பஞ்சுரம்

ப.தொ.எண்: 373 பதிக எண்: 115

 திருச்சிற்றம்பலம்

4035. ஆலநீழ லுகந்த திருக்கையே
       யானபாட லுகந்த திருக்கையே
பாலினேர்மொழி யாளொரு பங்கனே
     பாதமோதலர் சேர்புர பங்கனே
கோலநீறணி மேதகு பூதனே
     கோதிலார்மன மேவிய பூதனே
ஆலநஞ்சமு துண்ட களத்தனே
     யாலவாயுறை யண்டர் களத்தனே.        1


     1. பொ-ரை: சிவபெருமான் கல்லால நிழலை விரும்பி இருப்பிடமாகக்
கொண்டவர். அவருக்கு விருப்பமான பாடல் இருக்குவேதமாகும். அவர் பால்
போன்று இனிய மொழி பேசும் உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர்.
தம் திருவடிகளைப் போற்றாத அசுரர்களின் முப்புரங்களை அழித்தவர்.
அழகிய திருநீற்றைப் பூசிய சிறந்த பூதகணங்களைப் படையாக உடையவர்.
குற்றமற்றவர்கனின் உள்ளத்தில் தங்கிய உயிர்க்கு உயிரானவர். ஆலகால
விடமுண்ட கண்டத்தையுடையவர். தேவர்கட்கெல்லாம் தலைவரான அவர்
திருவாலவாய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: ஆலம் நீழல் - கல்லாலின் நீழலில். உகந்தது - விரும்பியது.
இருக்கை - இருப்பிடம். இருக்கை - வேதத்தை. ஓர் பங்கன் - ஒரு பங்கில்,
இடப்பாகத்தில் உடையவன். பாதம் ஓதலர் சேர்