பக்கம் எண் :

ஆராய்ச்சிக் கட்டுரைகள்155

இரண்டாம் வரகுணன் காலம்1
ஊர்க்கல்வெட்டு
எண்
காலக்குறிப்பு

 சமமான கிறித்துவ
ஆண்டு

1.அய்யம்பாளையம்
705/1905 2.





திருவெள்ளறை 84/1910

3. சவந்தினாதபுரம் 104/1947

4, லால்குடி
121/1929

ஆட்சி ஆண்டு 8 சகவருடம் 792





ஆட்சி ஆண்டு 13 விருச்சிக மாதம் அச்வதி நக்ஷத்திரம்
திங்கட்கிழமை

ஆட்சி ஆண்டு 13
தனுர் மாதம்
அவிட்டம் திங்கட்
கிழமை

ஆட்சி ஆண்டு 13
தனுர்மாதம் சதயம்
செவ்வாய்க்கிழமை

கி.பி.870 மார்ச்
மாதம் 22 ஆம்
தேதி முதல் 871
மார்ச் மாதம் 21
ஆம் தேதி வரை
இடைப்பட்ட காலம்

14ஆம் தேதி
நவம்பர் மாதம் 875

5ஆம் தேதி
டிசம்பர் மாதம்
875


6 ஆம் தேதி
டிசம்பர் மாதம் 875

     திருவெள்ளறை, சவந்தினாதபுரம், லால்குடி ஆகிய ஊர்கள் திருச்சி
மாவட்டத்தில் உள்ளவை. இக்கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் வரகுண
மகாராஜர் தனது அதிகாரியான அண்ட நாட்டு வேளான் என்பவனிடம் நிதி
அளித்து கோயில்களில் நிசதம் விளக்கு எரிக்க நிவந்தங்கள்
ஏற்படுத்தியதாகச் சொல்லப்பட்டுள்ளது.2 சவந்தினாத புரத்துக் கல்வெட்டின்
நாளுக்கு மறுநாள் லால்குடி கல்வெட்டின் நாளாக அமைவதையும்
நோக்கவேண்டும்.


     1 E.I. XXVIII No. 6; E.I. XXXII No. 41
     2 S.I.I. XIV; E.I. XXVIII No. 6