|
இக்கல்வெட்டுக்களின்
காலங்களைப் பின்னோக்கிக் கணித்தால்
இரண்டாம் வரகுணன் கி.பி. 863இல் மார்ச் மாதத்திற்கு பிறகு, நவம்பர்
மாதத்திற்கு முன் ஏதோ ஒரு நாளில் முடிசூடினான் என்பதை அறியலாம்.
அதாவது இரண்டாம் வரகுணன் முடிசூடியது கி.பி. 863 ஆகும்.
இம்மன்னனின் திருநெய்த்தானத்து கல்வெட்டு யாண்டு 4இல் செதுக்கப்
பட்டது.1 இதன் காலம் 866-67. வரகுண மகாராஜன் என்னும் பெயர் கொண்ட
திருவிளக்கு ஒன்று எரித்த கோன்பராந்தகன் என்பது வரகுணனின் தம்பியே.
இதனால் இவ்விருவரும் ஒற்றுமையாக இருந்தனர் என்பதை நன்கு
அறியலாம். கோன் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டதால் தம்பியாகிய
பராந்தகன் 866இல் முடிசூடியிருக்கவேண்டும் என்று கொள்ளலாம். அதாவது
அண்ணனே தன் தம்பிக்கு இளவரசுப்பட்டம் கட்டி வைத்தான்.
இச்சரித்திர
நிகழ்ச்சிகளைக் கோர்வையாகப் பார்த்தால் ஸ்ரீ மாற ஸ்ரீ
வல்லபனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர் என்பதை நன்கு அறியலாம்.
சிங்களவர் உதவிகொண்டு கி.பி. 860 இல் மதுரையில் சிம்மாதனம் ஏறிய
மகன் வெகுநாள் ஆளவில்லை. மூன்று ஆண்டுகளில் அவனை வரகுணன்
விரட்டி விட்டான். பின்பு தனது தம்பியையும் உடன் சேர்த்துக்கொண்டு
நெடுநாள்கள் அரசு புரிந்தான்.
860க்கும்
863க்கும் இடைப்பட்ட காலத்தை முக்கியமாகக்
கவனிக்கவேண்டும். இக்காலத்தில் சிங்களவர்களால் மதுரை சிம்மாதனத்தில்
வைக்கப்பட்டவன் யார்? அவனை விரட்டிவிட்டு, வரகுணன் எவ்வாறுதனது
ராஜ்யத்தைப் பெற்றான் இவ்வினாக்களுக்கு உரிய விடைகளைத் திண்டுக்கல்
வட்டத்தில் உள்ள பெரும்புல்லி என்னும் ஊரிலிருந்து கிடைக்கும்
கல்வெட்டும்2 பாண்டிய குலோதயா என்னும் வடமொழி சரித்திர வரலாற்றுக்
காவியமும் அளிக்கின்றன.
சிங்களவரை
விரட்டினால்தான் மதுரையை மீட்கமுடியும் என்பதை
வரகுணன் உணர்ந்து செயல்பட்டான். பெரும்புல்லிக் கல்வெட்டில்
பாண்டியருக்கும், சிங்களவருக்கும் நடந்த போர் நிகழ்ச்சி சொல்லப்படுகிறது.
இப்போரில் பள்ளி வேளான் நக்கன் புல்லன் என்பவன் வரகுணனுக்கு
உதவியாக இருந்து சிங்களவரை வென்று, வரகுண மகாராஜருக்குப் பணி
பலவும் செய்தான் என்று கூறப்படுகிறது. வரகுணன் தனது ஆட்சியை 863
இலிருந்து கணக்கிடுவதால் அப்போர் அந்த ஆண்டிலேயே நடந்திருக்க
வேண்டும்; மதுரையில்
1
S.I.I. V. No. 608.
2
E.I. XXXII No. 31.
|