|
இருந்த சகோதரனும்
அவ்வாண்டிலேயே விரட்டப்பட்டு இருக்க வேண்டும்.
பாண்டிய
குலோதயா என்னும் வடமொழிக் காவியம் தெரிவிக்கும்
அரிய செய்தி ஒன்றைக் காண்போம்.1 வரகுணனுடைய சகோதரன்
இராஜ்யத்தைப் பிடுங்கிக்கொண்டு வரகுணனைத் துரத்தி விட்டான்.
மனமுடைந்த வரகுணன் காடுகளில் அலைந்து திரிந்து கடைசியில்
திருவாதவூர் அடைந்தான். அங்குச் சிறந்த சிவபக்தராக விளங்கியவரும் பல
கலைகள் சாத்திரங்கள் அறிந்தவருமாகிய வாதபுரி நாயகர் என்னும்
அந்தணரை அடைந்தான். அவருடைய அருள் ஆசியால் வரகுணன் தன்
சகோதரனை மதுரையிலிருந்து துரத்திவிட்டு, பாண்டி மண்டலத்தை
ஆளத்துவங்கினான். வாதபுரி நாயகர் என்று இங்கே கூறப்படுபவர்
மாணிக்கவாசகரே ஆவர். மாணிக்கவாசகர் தொடர்பான மற்ற
செய்திகளையும் பாண்டிய குலோதயா நன்கு விளக்குகிறது. நரியைப்
பரியாக்கியது ஆகிய செய்திகளும் சொல்லப்படுகின்றன. மாணிக்கவாசகர்
வரகுணனுக்கு மந்திரியாக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
எனவே
கி.பி. 863இல் மாணிக்கவாசகர் சாத்திரங்கள் பல அறிந்த
சிவனடியாராக இருந்தார் என்பதையும், பின்பு பல ஆண்டுகள் வரகுணனுக்கு
மந்திரியாகவும் இருந்தார் என்பதையும் அறிகிறோம்.
வரகுணன்
தனது தம்பி பராந்தக வீரநாராயணனுக்கு கி.பி. 866இல் முடி
சூட்டி வைத்தான் என்தை முன்பே கண்டோம். பராந்தகனின் தளவாய்புரச்
செப்பேடு மன்னனின் 45ஆம் ஆட்சி ஆண்டில், கி.பி.911இல்
அளிக்கப்பட்டது.2
1
Pandya Kulodaya Edition 1981 - Page 50 Introduction - Pages 194 and 20
of English Translation - Edited by Dr.K.V.Sarma-Published by Institute
of Sanskrit and Indological Studies of Punjab University Hoshiarpur. When
Dr. K.V.Sarma was editing the manuscript, I had the rare opportunity of
associating myself with his research in identifying the historical characters
referred to in the poem. I am indebted to Dr. K.V.Sarma who has also acknowledged
in the book, my humble service.
2
பாண்டியர் செப்பேடு பத்து-தளவாய்ப்புர சாசனம்.
|