பக்கம் எண் :

158ஆராய்ச்சிக் கட்டுரைகள் 

இதில் பராந்தக வீரநாரயணன் தன் அண்ணன் வரகுணனை எம்கோ
என்றும், சிறந்த சிவபக்தன் என்றும் கூறுகிறான். வரகுணன் தவத்தை
மேற்கொண்டு இனிதிருக்கும் நாளில் இச்சாசனத்தை வெளியிட்டதாகத் தம்பி
பராந்தகன் கூறுகிறான்.

     “எம்கோ வரகுணன் பிள்ளை பிறைச் சடைக்கணிந்த
                       பினாக பாணி எம்பெருமானை
     உள்ளத்தில் இனிதிருவி உலகம் காக்கின்ற நாளில்......”

என்பது செப்பேடு வாசகம். இச்செப்பேடு வழங்கிய காலத்தில் வரகுணனும்
உயிருடன் இருந்தனன் என்பதை அறியலாம். இச்செப்பேட்டில் பராந்தக
வீரநாராயணன் வேறு ஒன்றையும் சொல்கிறான். அதாவது, வரகுணன்
அண்ணன்; அவன் சிவதர்மத்தில் ஈடுபட்டவன். அவன் உலகத்தைக் காத்து
வருகின்றனன். செப்பேட்டை வழங்கும் பராந்தக வீரநாராயணன்
அக்களநிம்மிடி வயிற்றில் பிறந்தவன். பராந்தகன் தனக்குமுன் பிறந்தவனைச்
செந்நிலத்தில் தோற்கடித்தான். இதனால் வரகுணனின் தாயும், பராந்தகனின்
தாயும் வேறாவர் என்பதை எளிதில் உணரலாம். பராந்தகனால்,
தோற்கடிக்கப்பட்டவன் வரகுணனாக இருக்க வாய்ப்பு இல்லை. எனவே
அவன் வேறு ஒருவளின் மகன் என்பதையும் நன்கு அறியலாம். தொகுத்து
நோக்கினால் ஸ்ரீ வல்லபனுக்கு மூன்று மனைவிகள் இருந்தனர்; மூத்தவளின்
மகன் வரகுணன்; இளையவளின் மகன் ஒருவன்; மூன்றாமவளின் மகன்
பராந்தக வீரநாராயணன் ஆவான் என்னும் உண்மைகள் புலப்படும்.

     பட்டத்து அரசியான மூத்தவளின் மகன் வரகுணன் வயதில்
சிறியவனாகவும் இளையவளின் மகன் வயதில் பெரியவனாகவும்
இருந்திருக்கலாம். பட்டத்து அரசியின் மகனே முடிசூட வேண்டும் என்று
தந்தை நினைத்திருக்கலாம். இதனைப் பொறாத இளையவளின் வயிற்றில்
பிறந்தவன்-வயதில் பெரியவன்-சிங்களவர்களுடன் சேர்ந்து துரோகச்
செயலில் ஈடுபட்டான் எனலாம். இத்துரோகச் செயலில் ஈடுபட்டவனின்
பெயர் வீரபாண்டியன். இதனைக் கொடும்பாளூரில் வாழ்ந்த பூதிவிக்கிரம
கேசரியின் கல்வெட்டால் அறியலாம். பூதிவிக்கிரம கேசரியும், வரகுணனும்,
பராந்தகனும் சமகாலத்தவர்கள். நண்பர்கள். பூதிவிக்கிரமகேசரி
வீரபாண்டியனைத் தோற்கடித்ததாகக் கொடும்பாளூர் கல்வெட்டில்
சொல்லப்பட்டுள்ளது.1 அந்த வீர


     1 S.I.I. XIX Introduction S.I.I. XXIII Introduction S.I.I. XXXIII-129;
K.V.Subramaniya Iyer-Quarterly Journal of Mythic Society Volume
XLIII Nos. 3 and 4.