பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள்175

ஆண்டின் கல்வெட்டு, இவ்வூரை உய்யக் கொண்டார் வளநாட்டு,
அம்பர்நாட்டு அம்பர் என்றும் திருக்கோயிலை அம்பரில் உடையார்
திருமாகாளம் கோயில் என்றும் குறிப்பிடுகின்றது1.

     விக்கிரமசோழன் காலத்தில், இத்திருக்கோயிலில் ஆளுடைய
நாயகரையும் அம்மையாரையும் எழுந்தருளுவித்தவன், க்ஷத்திரிய சிகாமணி
வளநாட்டுச் சிறுவேளூரான் அமுதன் திருச்சிற்றம்பலமுடையான்
உதயமார்த்தாண்ட மூவேந்த வேளான் ஆவான். இக்கோயிலில் இருக்கும்
திருச்சுற்றுமாளிகை விக்கிரம சோழனால் கட்டப்பட்டதாகும். இச்செய்தி
“ஸ்வஸ்திஸ்ரீ இத்திருமாளிகை விக்கிரமசோழன்” என்னும் கல்வெட்டால்
அறியலாகும்.

     இறைவர் திருமாகாளம் உடையார், திருமாகாளத்து மகாதேவர் என்னும்
பெயர்களால் வழங்கப்படுகின்றார். இத்திருக்கோயிலுக்கு, புரவுவரி வளாகம்,
வேதத்தூர், எயினிகுடி என்னும் ஊர்கள் தேவதானமாக வழங்கப்பட்டுள்ளன.
இத்திருக்கோயிலில் உமாமகேசுவரிக்குத் தனிக்கோயிலை எடுப்பித்தவன்
விக்கிரமசோழ மன்னனாவன்.

3. திருஅரரைப்பெரும்பாழி

     இது அரித்துவாரமங்கலம் என்று வழங்கப் பெறுகின்றது. இறைவன்
திருமுன்பு பன்றியாகிய திருமால் பறித்த பள்ளம் இருப்பதால் இப்பெயர்
பெற்றது என்பர்.

     இது தஞ்சாவூர்-நாகூர் தொடர்வண்டிப் பாதையில், கோயில்வெண்ணி
தொடர்வண்டி நிலையத்திலிருந்து 8 கி.மீ. தூரத்திலிருக்கிறது. சாலிய
மங்கலம் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கியும் செல்லலாம். அதிக
தூரமாகும். இது காவிரித் தென்கரைத் தலங்களுள் 99ஆவது ஆகும்.
தஞ்சையிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன.
பேருந்தில் செல்வதே எளிதான வழியாகும்.


     1 See the Annual Reports on South Indian Epigraphy for the
year 1910, No. 93-117, 240-249. (Tanjore District, Nannilam Taluk)