பக்கம் எண் :

176தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள் 

இறைவரின் திருப்பெயர்-பாதாள வரதர். இறைவியின் திருப்பெயர்-அலங்கார
வல்லி. தீர்த்தம்-பிரம தீர்த்தம்.

மரம்-வன்னி.

     இது, வராக அவதாரங்கொண்ட திருமாலின் கொம்பைப் பறித்துச்
சிவபெருமான் அணிந்துகொண்ட தலம். இதற்கு ஞான சம்பந்தர் பதிகம்
ஒன்று இருக்கிறது.

கல்வெட்டு:

     இவ்வூர்த் திருக்கோயிலில் மூன்றாங்குலோத்துங்க சோழ தேவரின்
பத்தாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டு ஒன்று மட்டுமே
உளது. அதுவும் சிதைந்த நிலையில் உள்ளது. அம்மன்னன் மதுரை கொண்ட
செய்தியை அது உணர்த்துகிறது1.

4. திருஅவளிவணல்லூர்

     (அவள்+இவள்+நல்லூர்). பழங்காலத்திலே இப்பதியில்
எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பூசித்த ஆதிசைவ அந்தணர்
ஒருவர்க்கு இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களில் மூத்த பெண்ணை
மணந்தவர் காசியாத்திரைக்குச் சென்றிருந்தனர். சென்றபின் அம்மூத்தபெண்
அம்மைவார்க்கப்பெற்று உருவின் நிறம் மாறிக் கண் இழந்திருந்தனர்.
தந்தையார் இளைய பெண்ணை வேறு ஒருவர்க்கு மணஞ்செய்து
கொடுத்திருந்தனர்.

     சில ஆண்டுகளுக்குப் பின்னர் காசியாத்திரை சென்றவர்
திரும்பிவந்தார். அக்காலம் இளைய பெண்ணும் கணவன் வீட்டிலிருந்து
வந்திருந்தனர். மூத்த பெண்ணின் நிற வேறுபாட்டைக் கண்டு ‘இளையவளே
தம் மனைவி. மூத்தவளைத் தம் மனைவி என்று சொல்லி ஆதி சைவ
அந்தணர் ஏமாற்றுகின்றனர்’ எனக் கூறி மூத்த பெண்ணை மணந்தவர்
வழக்கிட்டனர்.

     இறைவன் இடபவாகனத்தில் எழுந்தருளி மூத்த மகளே இவரது
மனைவி என்னும் பொருளில் அவள் இவள் எனச் சுட்டிக்காட்டிய
காரணத்தால், நல்லூர் என்னும் பெயரோடு, அவள்


     1 See the Annual Reports on South Indian Epigraphy for
the year 1902, Number 611.