பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள்177

இவள் என்னும் தொடரையும் சேர்ந்து அவளிவணல்லூர் என்னும் பெயர்
எய்திற்று என்பர். கர்ப்ப இல்லில் எழுந்தருளியிருக்கும் இறைவனது
பின்பக்கத்தில் இவ் வரலாற்றை உயர்த்தும் பிரதிமைகள் உள்ளன. இவ்
வரலாற்றுக்கு ஆதாரமாக அவற்றைக் காட்டுவர்.

     இது சாலியமங்கலம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடகிழக்கே
10 கி.மீ. தூரத்தில் உளது. கோயில்வெண்ணி தொடர்வண்டி நிலையத்தில்
இறங்கியும் இவ்வூர்க்குச் செல்லலாம். இது காவிரித் தென்கரைத் தலங்களுள்
நூறாவது ஆகும். கும்பகோணத்திலிருந்து அம்மாபேட்டை செல்லும் நகரப்
பேருந்துகளும், தஞ்சையிலிருந்து அரித்துவாரமங்கலம் செல்லும்
நகரப்பேருந்துகளும் இவ்வூரின் வழியாகவே செல்கின்றன.

     இறைவரின் திருப்பெயர்:-1. தம்பரிசுடையார். இப்பெயர் இவ்வூர்க்குரிய
திருஞானசம்பந்தர் பதிகத்தில் குறிக்கப்பெற்றுள்ளது. சேக்கிழாரும்
இப்பெயரைத் “தம் பரிசுடையார் என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி” எனக்
குறித்துள்ளனர். 2. சாட்சிநாதர்1. இறைவன் ஆதிசைவ அந்தணரின் மூத்த
மகளின் பொருட்டுச் சான்று பகர்ந்தமையின் இப்பெயர் பெற்றார். இறைவியின்
திருப்பெயர் சௌந்தரிய வல்லி. தீர்த்தம் சந்திரபுட்கரணி. மரம் பாதிரி.

     வராகமூர்த்தியும் காசிப முனிவரும் இறைவனை வணங்கிப் பேறு
பெற்றனர். அம்மையால் வருந்தி உடல் நிறம் மாறிக் கண் இழக்கப்பெற்ற
ஆதிசைவ அந்தணரது மூத்த மகள் இவ்வூர்த் தீர்த்தத்தில் மூழ்கப்
பெற்றதன் காரணமாக உடல் வனப்பும், கண்ணும் பெற்றுள்ளனர். இவ்
ஊர்க்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், திருநாவுக்கரசர் பதிகம்
ஒன்றும் ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன.

கல்வெட்டு:

     இவ்வூர்க் கோயிலில் நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவற்றில்
இரண்டு கல்வெட்டுக்கள், மூன்றாம் இராஜராஜசோழனுடைய மகனும்,
சோழமண்டலத்தைக் கி.பி.1246 முதல் 1279 முடிய ஆண்டவனுமாகிய
மூன்றாம் இராஜேந்திரசோழனின் ஏழாவது,


     1 திருப்புறம்பயத்துப் பெருமானுக்குச் சாட்சிநாதர் என்ற பெயர் உண்டு.