பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள்191

கற்றளியைக் கட்டியவர்:

     பராந்தகன் காலத்தில் இக்கற்றளியைக் (கருங்கல்கோயிலை) கட்டியவர்
கற்றளிப்பிச்சர் ஆவர். இவருடைய பிரதிமை கர்ப்ப இல்லின் தென்புறத்தே
அதாவது தட்சிணாமூர்த்தி சந்நிதிக்குக் கீழ்ப்புறத்தில் கைகளை மார்பிற்கு
நேரே குவித்துத் திருவாவடுதுறை உடையாரை வழிபடும் நிலையில்
இருக்கின்றது. கற்றளிப் பிச்சன் என்று அவரது பெயர் செதுக்கப்பட்டுள்ளது.
பிச்சன் என்றால் அன்புடையவன் என்று பொருள். “நின்கோயில் வாயில்
பெரிய பிச்சனாக்கினாய்” என்பது திருவாசகம்.

     இக்கற்றளிப்பிச்சர் பிரதிமைக்குக் கிழக்குப் புறத்தே கைகளைத்
தலைமேல் குவித்து வழிபடும் பிரதிமை ஒன்று இருக்கின்றது. இவர்
கற்றளிப்பிச்சனார் இளவல் திருநாவுக்கரைய தொண்டராவர்.

கற்றளிப்பிச்சனார் இக்கோயிலைக் கட்டினார் என்பதற்கு ஆதாரம்:

     “ஸ்வஸ்தி ஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேஸரி வன்மற்குயாண்டு
இருபத்தைந்தாவது தென்கரைத் திருவழுந்தூர் நாட்டு பிர்மதேயம்
சிற்றானைச் சூர்ஸபையோம். இவ்வூர் கவிசங்கரன் மாறனிடைத்திரைமூர்
நாட்டு பிர்மதேயம் சாத்தனூர் திருவாவடுதுறை கற்றளி எடுத்தபித்தன்
மஹாதேவர்க்கு உவச்சப்புறமாக விலை கொண்ட நிலம் பதினொருமாச்
செய்யும்” என்னும் கல்வெட்டுப்பகுதி விளக்குகின்றது. (இக்கல்வெட்டு
அகத்தியர் பிரதிமைக்கு மேற்குப் பக்கத்தில் இருக்கிறது. உவச்சர் என்பார்
சங்கு, காளம் இவைகளை ஊதுபவர். புறம் = நிவந்தம். உவச்சப்புறம் -
என்பது சங்கு, காளம் இவைகளை ஊதுபவர்களுக்கு நிவந்தமாக
அளிக்கப்பெற்றது எனப்பொருள்படும்.)

கோயிலின் சிற்சில பகுதிகளைச் செய்வித்தவர்:

     அர்த்த மண்டபத்தின் வடபால், துர்க்காதேவிக்குக் கீழண்டைப்
பக்கத்தில் திருவாவடுதுறை உடையாரைத் தொழுவாராக ஒரு ஆடவரின்
பிரதிமையும் அவருக்குப் பக்கத்தில் ஒரு அம்மையாரின் பிரதிமையும்
இருக்கின்றன. அவர்கள் இக்கோயிலில் ஒருபடை செய்வித்தவர் ஆவர்.
அப்பிரதிமைகளுக்கு அருகில் “இக்கோயிலில் ஒருபடை செய்விச்சு நின்றான்
வாமபூசலுடையான்