பக்கம் எண் :

192தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள் 

எழுவன் சத்திரசேகரன் இவன் பின்னே நின்றாள் பெரிய வேளத்து
வானல்லடிகள் நக்கன்” என்று தீட்டப்பட்டிருக்கின்றன. அர்த்த மண்டபத்தின்
தென்பாகத்தில் பிள்ளையார் திருமேனிக்குக் கிழக்குப் பக்கத்தில்
“கல்கட்டுவித்தார் பல்லவமகாதேவியார் சிவகாமு” என்று செதுக்கப்
பட்டுள்ளது. எனவே இவ்வம்மையாரும் இப்பகுதியைக் கட்டுவதற்கு உதவி
செய்தவர் ஆவர். கர்ப்ப இல்லின் தென்புறத்தில் தட்சிணாமூர்த்தி
திருமேனிக்கு மேற்குப் பக்கத்தில் கைகளைத் தலைமேல் குவித்து வணங்கும்
ஒரு பிரதிமை இருக்கிறது. அதன்கீழ் “ஸ்ரீ திருவாவடுதுறை உடையார்
அடியான் அம்பலவன் திருவிசலூரான் திருநாவுக்கரையன்” என்று
செதுக்கப்பட்டுள்ளது. இவனும் இத்திருப்பணிக்கு உதவி செய்தவன் ஆவன்.
இத்தட்சிணாமூர்த்திக்கு மேற்குப் பக்கத்தில் இருக்கும் பிரதிமை
மிறைக்கூற்றத்து வீரமாங்குடி உடையானது ஆகும். அர்த்த மண்டபத்தின்
கிழக்குப்புறச் சுவரில் வாசலுக்கு வடபால், மார்பில் கைகளைக்
குவித்துக்கொண்டு இறைவனை வழிபடும் நிலையில் செதுக்கப்பட்டிருக்கும்
பிரதிமை திருநறையூர் நாட்டுச்சிற்றாடியான் தாமன் அம்பலவனான
நமசிவாயனுடையதாகும்.

இறைவரின் திருப்பெயர்:

     இத்திருக்கோயிலில் எழுந்தருளும் இறைவர், திருவாவடுதுறைத் தேவர்,
திருவாவடுதுறை ஆழ்வார், திருவாவடுதுறை உடையார், திருவாவடுதுறைப்
பெருமான் அடிகள் என்னும் திருப்பெயர்களால் இக்கோயில்
கல்வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளனர். மிகப் பிற்காலத்துக் கல்வெட்டு
ஒன்று இறைவர் திருப்பெயரைக் கோமுத்தீல்வரர் என்று குறிப்பிடுகிறது.

இறைவியாரின் திருப்பெயர்:

     மிகப் பிற்காலத்துக் கல்வெட்டு இறைவியாரின் திருப்பெயரை அதுல
குச நாயகி எனக் கூறுகின்றது.

     இத்திருக்கோயிலில் மிகப் பழங்காலத்தில் எழுந்தருளுவிக்கப் பெற்ற
திருமேனிகளும் பிரதிமைகளும்:

     சிற்றம்பலத்திருமேனி முதல் ஆடி அருளும் உடையாரும்,
ஆட்டத்திற்கு வாசிக்கும் பூதமமைத்த பீடமும் பிரபையும் (திருவாசி) உட்பட
முழ உயரத்து ஒருவர். இவர் நம்பிராட்டியார் பீடமும்