பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள்193

பிரபையுமுள்பட இருந்த ஒருமுழமும் ஆறுவிரல் உயரத்து ஒருவர்:
சந்திரசேகர தேவர் பீடமும் பிரபையும் உட்பட இருமுழ உயரத்து ஒருவர்.
இவர் நம்பிராட்டியார் பத்மத்தோடும் ஒருமுழ உயரத்து ஒருவர்; திரிபுவன
சுந்தரர் பீடமும் பிரபையும் உட்பட மும்முழ உயரத்து ஒருவர். கணபதியார்
பீடமும் பிரபையும் உட்பட ஒருமுழ உயரத்து ஒருவர்; சந்திரசேகர தேவர்
பீடமும் பிரபையும் ஒருசாணும் ஒருவிரல் உயரத்து ஒருவர்: க்ஷேத்திர பால
தேவர் பீடமும் பிரபையும் உட்பட ஒரு முழ உயரத்து ஒருவர். மேற்படி
தேவர் பீடம் உட்பட ஒருசாணே நால்விரல் உயரத்து ஒருவர். இடபவாகன
தேவரும் பிராட்டியாரும், இடபமும் பீடமும் பிரபையுமுட்பட மும்முழ
உயரத்து ஒருவர். பிச்சதேவர் மானும் பூதமும் பீடமும் பிரபையும் உட்பட
இருமுழ மூவிரல் உயரத்து ஒருவர். அர்த்த நாரி தேவர் பத்மத்தொடு ஒரு
முழம் ஓட்டை உயரத்து ஒருவர். தட்சிணாமூர்த்தி ஒரு முழ உயரத்து
ஒருவர். பள்ளிக்கட்டில் நம்பிராட்டியார் பீடமுட்பட இருமுழ உயரத்து
ஒருவர். அஸ்திரதேவர் நடுவுமாகத் தண்டொடும் ஒருவர். இடபதேவர்
பீடமுட்படத் திருக்காம்பு அளவும் ஈரொட்டை உயரத்து ஒருவர்.
சண்டேசுவர தேவர் பீடமுட்பட இருந்த ஒருமுழ உயரத்து ஒருவர்.
திருநாவுக்கரைய தேவர் ஒருமுழமும் நான்கு விரல் உயரத்து ஒருவர்.
சிவஞானசம்பந்த அடிகள் பீடமும் பிரபையும் உட்பட ஒருமுழம் ஆறுவிரல்
உயரத்து ஒருவர். நம்பி ஆரூரனார் பத்மத்தோடு ஒரு முழமும் ஆறுவிரல்
உயரத்து ஒருவர். திருக்காளத்திப்பிச்சர் தம்மையாக வார்த்த ஒரு முழ
உயரத்து ஒருவர்.

     வெண்கலம், பித்தளை, செம்பு, தரா இவைகளினால் செய்யப்பெற்ற
பாத்திரங்களும் குத்திவிளக்கு வகைகளும்:

     வெண்கலம் முதல் உரு ஐம்பத்துமூன்றினால் வெள்ளிக் கோலால்
நிறை ஆயிரத்து நாநூற்று இருபத்து முப்பலவரை. பித்தளை முதல் உரு
மாண்டினால் மேற்படி கோலால் நிறை நூற்றேழுபலம். செப்பு முதல் உரு
எழுபதினால் மேற்படி கோலால் நிறை தொள்ளாயிரத்து இருபத்தைம்பலனே
கஃசு. தராமுதலுரு நாற்பத்துநாலினால் மேற்படி கோலால் நிறை
இரண்டாயிரத்து எண்ணூற்று நாற்பத்தைம்பலவரை. தராகுத்துவிளக்கு-கருவும்
உட்பட விளக்கு முப்பது. இவ்வூர்க் கவுணியன் இந்நிலத்தானாக வார்த்த
விளக்கு ஒன்று ஆக விளக்கு முப்பத்தொன்று.

அணிகலன்களும் பரிகலன்களும்:

     உடையார் ஸ்ரீ இராஜேந்திர சோழதேவர் நம்பிராட்டியார்