|
திரைலோக்கியமாதேவியாரின்
தாயாரான இராமன் அபிமான தொங்கியார்,
திருவாவடுதுறை உடையார்க்கு அமுது செய்தருள வெள்ளித் தளிகை ஒன்று
குடிஞைக் கல்லால் எழுபதின் கழஞ்சு நிறை உள்ளதும், உடையார்க்குப்
பொற்கொள்கை ஒன்று குடிஞைக் கல்லால் செம்பொன் நாநூற்று ஒருபத்து
முக்கழஞ்சரை நிறையுள்ளதும் ஆகிய இவ்விரண்டையும் கொடுத்திருந்தனர்.
உடையார் இராஜாதிராஜ தேவர், பெரியவேளத்து அலோயன் அணுக்கி,
மேற்படி வேளத்து மற்றொரு அம்மையார் இவர்கள் கொடுத்த பொன்னால்
பொற்பூ இருபத்தேழு, செங்கழுநீர்ப்பூ முப்பத்தாறு, மாந்தளிர் ஒன்று, பிட்ச
தேவர் கண்டக் காறை ஒன்று, பொற்கை ஈச்சோப்பி ஒன்று. இவைகள்
செய்யப்பெற்று அணிவிக்கப்பெற்றுவந்தன.
திருவிழா:
இத்
திருக்கோயிலில் புரட்டாசி மாதத்தில் ஏழு நாள்களில் திருவிழா
நடைபெற்றுவந்தது. அக்காலம் மூலநட்சத்திரத்தன்று கொடியேறி பூரட்டாதி
நட்சத்திரத்தன்று தீர்த்தமாடுவது வழக்கம். இச்செய்தி, திருமா எடுத்த நாள்
மூல முதல் அடக்கடவ அரிசி அரிய சிவயோகிகளுக்கும் பத்தர்களுக்கும்,
மாகேசுவரர்களுக்கும் அரிசி தூணியும், பூராடத்தினன்று சிவயோகிகளுக்கு
அடும் அரிசி தூணிப்பதக்கும், பன்மாகேசுவரர்க்கு அடும் அரிசி கலமும்,
உத்திராடத்தினன்று சிவயோகிகளுக்கு அரிசி கலமும் பன்மாகேசுவரர்க்கு
அடும் அரிசி முக்கலமும் திருவோணத்தினன்று சிவயோகிகளுக்கு அடும்
அரிசி இருகலமும், பன்மாகேசுவரர்களுக்கு அடும் அரிசி ஆறுகலமும்,
அவிட்டத்தினன்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி முக்கலமும்,
பன்மாகேசுவரர்க்கு அடும் அரிசி ஏழுகலமும், சதயத்தன்று சிவயோகிகளுக்கு
அடும் அரிசி நாற்கலமும், பன்மாகேசுவரர்க்கு அடும் அரிசி எண்கலமும்,
தீர்த்தமாடும் பூரட்டாதி ஞான்று சிவயோகிகளுக்கு அடும் அரிசி ஐங்கலமும்,
பன்மாகேசுவரர்க்கு அடும் அரிசி பன்னிருகலமும் ஆக இவ் ஏழு நாளும்
அடக்கடவ அரிசி ஐம்பத்திருகலமும் என்னும் மிறைக்கூற்றத்து, வீரமாங்குடி
உடையான் தாயங்காடன் என்பவன், மதுரை கொண்ட கோப்பர
கேசரிவர்மரின் முப்பத்தாறாம் ஆண்டில் இவ் விழாவிற்கு வரும்
சிவயோகிகளுக்கும், பன்மாகேசுவரர்களுக்கும் ஊட்டூட்டின் பொருட்டு
சிறுபுலியூரிலும், சிற்றானைச்சூரிலும் நில நிவந்தம் அளித்துள்ள கல்வெட்டுப்
பகுதியால் அறியக்கிடக்கின்றது.
இவ்விழா
முடிவுநாளாகிய புரட்டாசிப் பூரட்டாதிநாளில் திருமூல
நாயனாரது நாடகமும் ஆரியக்கூத்து ஏழு அங்கமும்
|