பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள்195

நடத்தப்பெற்று வந்தன. இச்செய்தி இக்கோயில் கர்ப்ப இல்லின் மேற்குப்புறச்
சுவரில் உள்ள, முதலாம் இராஜராஜசோழதேவரது ஒன்பதாம் ஆண்டில்
பொறிக்கப்பெற்ற கல்வெட்டினால் புலப்படுகின்றது.

மகாமண்டபத்தைக் கட்டியவன்:

     இம் மகாமண்டபத்தைக் கட்டியவன் இளங்காரிகுடையான்
சங்கரதேவன் ஆவன். இத் திருப்பணிக்குத் திருவெண்காடு உடையான்
அனங்கனும் உதவி செய்துள்ளான். இவைகளை இம் மண்டபத்தின்
உள்பக்கத்தில் இருக்கும் தூண் ஒன்றில் “ஸ்வதிஸ்ரீ இத் திருமண்டபம்
இளங்காரிமுடையான் சங்கர தேவன்” என்னும் கல்வெட்டாலும்;
இம்மகாமண்டபத்தின் தென்பக்கமுள்ள ஒரு தூணின் போதியக்கட்டையில்
உள்ள, “இக்கல் திருவெண்காடு உடையான் அனங்கன் திருப்பணி” என்னும்
கல்வெட்டாலும் அறியலாம்.

திருமடங்கள்:

     இவ்வூரில் முதற்குலோத்துங்கசோழன் காலத்தில் திருநீலவிடங்கன்
மடம், திருவீதி மடம், நாற்பத்தெண்ணாயிரவம் மடம் என்னும் பெயருள்ள
திருமடங்கள் இருந்தன.

அறச்சாலைகள்:

     இவ்வூரில் விக்கிரமசோழன் காலத்தில் பெருத்திருவாட்டி அறச்சாலை,
சங்கரதேவன் அறச்சோலை, முந்நூற்று அறுபத்து நால்வன் அறச்சாலை
என்னும் அறச்சாலைகள் இருந்தன. இவற்றுள் பெருந்திருவாட்டி என்னும்
அறச்சாலை, கங்கைகொண்ட சோழபுரத்து கங்கை கொண்ட சோழன்
திருக்கொற்றவாசலில் புறவாயில் சேனாபதியாக இருந்த இளங்காரிகுடையான்
சங்கரன் அம்பலன்கோயில் கொண்டானான அனந்தபாலன் என்பவனால்
நிறுவப்பெற்றதாகும். சங்கர தேவன் அறச்சாலை திருவாவடுதுறை
உடையார்கோயில் சிவலோக நாயகன் திருவாசலின் முன்பக்கத்தில் இருந்தது.
மேற்குறித்த மடங்களிலும் அறச்சாலைகளிலும் திருவாவடுதுறை உடையார்
திருநாளில் அடியார்களுக்கும், பிராமணர்களுக்கும், தபசிகளுக்கும்,
அநாதைகளுக்கும் அமுது அளிக்கப்பெற்றுவந்தன. முந்நூற்று அறுபத்து
நால்வன் அறச்சாலையில் மருத்துவ நூல் படிப்பவர்களுக்கும், இலக்கணம்
படிப்பவர்களுக்கும் அமுது அளிக்கப்பெற்றுவந்த செய்தி
குறிப்பிடத்தக்கதாகும். இவைகளன்றி முதலாம் இராஜேந்திரசோழன்