பக்கம் எண் :

196தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள் 

கல்வெட்டில் சர்வதேவன் திருமடம் என்றும் குறிக்கப்பெற்றுள்ளது.

நடனசாலை:

     இத் திருக்கோயிலில் முதற்குலோத்துங்கசோழன் காலத்தில் நானாவித
நடனசாலை என்னும் பெயருள்ள நடனசாலை இருந்தது.

அளிக்கப்பெற்ற நில நிவந்தங்களுள் சில:

     இக்கோயிலைக் கட்டிய கற்றளிப்பிச்சன் திருப்பதியம் பாடுவார்
ஒருவர்க்கும், திருமஞ்சன மட்டுவார்க்கும், உவச்சர்களுக்கும், மடத்துக்கும்
சிற்றானைச்சூரில் நிலம் வாங்கி அளித்துள்ளான். கோப்பரகேசரிவர்மர்
(முதற்பராந்தக சோழன்) காலத்தில் இந்நிவந்தம் செய்யப்பெற்றதாகும். இதை
உணர்த்தும் கல்வெட்டுப் பின் வருமாறு: ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி
வன்மற்கியாண்டு 3 (மூன்றா) வது திருவாவடுதுறைக் கற்றளிப்பிச்சநேன்.
சிற்றானைச்சூரனான் விலைக்கறக்கொண்டு மேற்புலத்து வடக்கடையத்
திருப்பதியம் பாடுவாரொருவற்கு அறுமாவும். இதன் தெற்கடை காற்செய
திருமஞ்சனமட்டுவார்க்குக் காலும் இதன் தெற்கடையத் திரு உவச்சர்களுக்குக்
காணி மடத்துக்கு காலுமாக நிவந்தஞ்செய்து குடுத்தேன். கற்றளிப்பிச்சநேந்
இது பன்மாஹேஸ்வர ரக்ஷை. இக்கல்வெட்டு அர்த்தமண்டபத்தின்
கிழக்குப்புறச் சுவரில் வாசலுக்கும் துவாரபாலகர்க்கும் வடபால் இருக்கின்றது.
திருமூலநாயனாரைப் பற்றிய நாடகம் நடிப்பதற்கும் ஆரியக் கூத்து ஏழு
அங்கம் ஆடுவதற்கும் அளிக்கப்பெற்ற நில நிவந்தம்:

     திருவாவடுதுறை உடையாரின் திருவிழா முடிவுநாளில் அதாவது
புரட்டாசிமாதம் பூரட்டாதி நட்சத்திரத்தன்று திருமூலநாயனாரது நாடகம்
நடித்தல்; ஆரியக் கூத்து ஏழு அங்கம் ஆடுதல் இவைகளைப் பற்றி
முன்னர்க் கூறப்பெற்றுள்ளது. அவைகளை அக்காலத்தே நடித்தவர்
வடுகமாங்குடி பாண்டிகுலாசனி ஆவர். அவர்க்குப்பின் அவைகளை
நடித்தவர் சாக்கையர் குமரன் சீகண்டவன் ஆவர். அவைகளின்பொருட்டு
சீகண்டனுக்கு சாத்தனூர் சபையார் தங்கள் ஊரில் இருந்த அறச்சாலை
அம்பலத்தில் கூட்டம் குறைவறக்