திருமருகலில்,
பாம்புகடித்திறந்த வணிகனை உயிர்த்தெழச்செய்து,
பெருவாழ்வுநல்கி, அவனையே நம்பியிருந்த திக்கில்லாதவளுக்குத்
தெய்வத்துணையானார். திருச்செங்காட்டங் குடியையும், திருப்புகலூரையும்
தரிசித்தார். சிறுத்தொண்டர், முருகர் முதலிய நாயனாரைச் சிறப்பித்துப்
பாடினார். அங்கும் அப்பரைக் கூடினார். திருவாரூர்த் திருவாதிரைச்
சிறப்புரைத்தார். திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றுப் பஞ்சத்தை ஒழித்தார்.
திருமறைக்காட்டில் அப்பருடன் கூடி, பாடித் திருக்கதவைத் திறந்து மூடுஞ்
சீருடைய தாக்கினார்.
திருமதுரை
சென்று, மங்கையர்க்கரசியாரையும் குலச் சிறையாரையும்
சிறப்பித்தார். அரசன் வெப்பு நிங்கித் தப்பும்படி திருநீற்றுப் பதிகத்தை
அருளினார். அங்கு, தம் மடத்தில்இட்டதீயை அரசனுக்கு
வெப்புநோயாக்கினார். தீயில் இட்ட ஏட்டைப் பச்சையாகக் காட்டினார்.
நீரிலிட்ட ஏடு எதிரேறிச்செல்லும் பாட்டினார் ஆனார். சைவர்மடத்தில்
தீவைத்த காரணத்தால் கழுவேறியவர்களை விலக்காதிருந்தார். வேந்தனும்
ஓங்குக என்று வாழ்த்திப் பாண்டியன் கூன் நிமிரச் செய்தார்.பாண்டிநாடு,
புறச்சமய இருளின் நீங்கித் திரு நீற்றொளியொடு விளங்கித் திருநெறியில்
ஒழுகிற்று.
திருக்கொள்ளம்பூதூரில்
ஓடம்போக்கினார். போதிமங்கையில் எதிர்த்த
புத்தநந்தியின் தலைமேல் இடிவிழ வைத்த நந்தியாயினார். சிவிகையைத்
தாங்கிய அப்பரைப்போற்றிச் சின்னாள் திருப்பூந்துருத்தியில் இருந்தார்.
ஒருவரையொருவர் உசாவிப் பாண்டிநாடு தொண்டைநாடுகளில் தரிசன
விசேடங்களை அறிந்தனர். திருவோத்தூரில் ஆண் பனைகளைப் பெண்
பனைகளாக்கினார். திரு மயிலாப்பூரில், தமக்கென்றிருந்து பாம்பு கடித்திறந்த
பூம்பாவையின் எலும்பைக்கொண்டு, திருப்பதிகம்பாடி, உயிருடைய
உருவமாக்கியருளினார்; வீட்டையும் காட்டினார். திருநல்லூர்ப் பெருமணத்தில்
நம்பாண்டார் நம்பிகள் திருமகளை மணம்புரியுங்கால், இவளொடும் சிவனடி
சேர்வன் என்று திருக்கோயிலை உற்றுத் திருப்பதிகம் பாடினார். திருமணம்
காணவந்தார் எல்லாரும் அருள் மணம் புரிந்து அழியா இன்பம்
அடைகின்றனர். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பாடிய
திருவைந்தெழுத்தின் பெருமையே எல்லா நலங்களுக்கும் காரணம்.
நமச்சிவாய
வாழ்க
திருஞானசம்பந்தர்
திருவடி வாழ்க.
|