நம்பியாண்டார்
நம்பிகள் பண் வரிரையில் திருமுறைகளை அடைவு
செய்தனராயினும், ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் திருமுறைகளில் முதல்
திருப்பதிகத்தையும் நிறைவுத் திருப்பதிகத்தையும் பாடியவாறே வைத்து
அடைவு செய்திருக்கும் முறையில் தோடுடைய செவியன் திருப்பதிகத்தை
முதல்திருமுறையின் முதலாவது திருப்பதிகமாகவும், கல்லூர்ப் பெருமணம்
திருப்பதிகத்தை மூன்றாம் திருமுறையின் நிறைவுத் திருப்பதிகமாகவும் அமைத்துள்ளார்.
இவ்வாறு
ஞானப் பெருங்கடலாக விளங்கும் அவர்தம் தேவாரம்
உரை விளக்கங்களோடு தருமை ஆதீன வெளியீடாக ஸ்ரீலஸ்ரீ
கயிலைக்குருமணிகளின் அருளால் 1955 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
இதுபோது
தருமை ஆதீனம் 26ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ
சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள்
இத்திருமுறையில் பொழிப்புரையையும் குறிப்புரையோடு கூடுதலாக
இணைக்கச் செய்து ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணியின் குருபூசை வெள்ளிவிழா
நினைவாக வெளியிட்டரருளு கின்றார்கள்.
இத்திருமுறைக்கு
தருமை ஆதீனத் தேவாரப் பாடசாலை தமிழாசிரியர்
பண்டித திரு. அ. கந்தசாமிப்பிள்ளை அவர்கள் எழுதிய விளக்கக்
குறிப்புரையோடு, மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தத்துவத்துறைப்
பேராசிரியர் டாக்டர். திருமதி. கோமதி சூரியமூர்த்தி அவர்கள் எழுதிய
பொழிப்புரையும் சேர்க்கப் பெற்றுள்ளது.
இத்திருமுறைப்
பதிப்புக்களைச் செம்மையான முறையில் அச்சிட்டு
வழங்கும் பொறுப்பைச் சென்னை-யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர்,
மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி
உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார்.
அன்பர்கள்
ஓதி உணர்ந்து இன்புறுவார்களாக.
ஸ்ரீலஸ்ரீ
குருமகா சந்நிதானத்தின்
திருவுளப்பாங்கின்
வண்ணம்
ஸ்ரீ சட்டைநாத சுவாமி பொன்னம்பலத் தம்பிரான்
தேவஸ்தானம், சீகாழி கட்டளை
விசாரணை.
|