| 2887. |
தேரரும்
மாசுகொள் மேனியா ரும்தெளி |
| |
யாததோர்
ஆரருஞ் சொற்பொரு ளாகிநின் றஎம
தாதியான்
காரிளங் கொன்றைவெண்டிங்களா னுங்கட
வூர்தனுள்
வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்தர
னல்லனே. 10 |
| 2888. |
வெந்தவெண்
ணீரணி வீரட்டா னத்துறை |
| |
வேந்தனை
அந்தணர் தங்கட வூருளா னைஅணி
காழியான் |
10. பொ-ரை:புத்தர்களும்,
அழுக்கு உடம்பையுடைய சமணர்களும்
தெளிந்தறிதற்கரிய சொல்லும், பொருளுமாகி நின்ற எம் ஆதிப்பிரான்,
கார்காலத்தில்மலரும் இளங்கொன்றைப் பூக்களை அணிந்துள்ளவனும்,
வெண்ணிறச் சந்திரனைச் சடையில் சூடியுள்ளவனும், வீரக்கழல்களை
அணிந்துள்ளவனும் ஆகிய, திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில்
எழுந்தருளியிருக்கும் அரன் அல்லனோ?
கு-ரை:தேரர்-புத்தர்.
மாசுகொள் மேனியர்-அழுக்குடைய
உடம்பையுடைய சமணர். குளித்தால் நீரில் உள்ள சிறு உயிர்கள் இறந்து
விடுமேயென்று நீராடாமையால் மாசுகொள் மேனியர் ஆவர். ஆர் அரும்
சொல் பொருளாகி நின்ற-நிறைந்த அரிய சொல்லும் பொருளுமாகி நின்ற.
கார் இளங் கொன்றை-கார் காலத்தில் மலரக் கூடிய இளம் கொன்றை,
அன்றலர்ந்த கொன்றைப்பூ. கொன்றை வெண்டிங்களானும்-
கொன்றைமாலையோடணிந்த வெள்ளிய சந்திரனையுடையவனும், வீரமும்
சேர் கழல்-அதுவே பின் கருணையும் செய்தது என்னும் பொருள் தரலால்
எதிரது தழுவிய எச்சவும்மை.
11. பொ-ரை:விதிப்படி அமைக்கப்பட்ட
திருவெண்ணீற்றினை
அணிந்துள்ள திருவீரட்டானத்து இறைவனாய், அந்தணர்கள் வழிபாடு
செய்யத் திருக்கடவூரில் திகழ்பவனை, அழகிய சீகாழியில்அவதரித்த
வேதமுணர்ந்த ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய இச்சந்தப் பாடல்களை
இறைவன் திருவடிக்குப் பக்தியுடன் சாத்திப் பாடியாடும் அன்பர்களின் பாவம்
கெடும்.
|