பக்கம் எண் :

460திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

சந்தமெல் லாம்அடிச் சாத்தவல் லமறை
       ஞானசம்
பந்தன செந்தமிழ் பாடியா டக்கெடும்
     பாவமே. 11

திருச்சிற்றம்பலம்

     கு-ரை:சந்தம் எல்லாம் அடிச்சாத்தவல்ல-அழகிய சந்தப்
பாடல்களையெல்லாம் திருவடிக்குச் சாத்தவல்ல (ஞானசம்பந்தன்) சந்தம்-
பண்பாகு பெயர். வெந்த-விதிப்படி செய்யப்பட்ட கற்பநீறு. அந்தணர்-
மாதவக்கலயர் முதலோர். அகரம் ஆறனுருபு பன்மை. ஆடப் பாவம்
கெடும்.

    திருஞானசம்பந்தர் புராணம்
மற்ற வண்பதி அணைந்துவீ ரட்டத்து
     மழவிடை யார்கோயில்
சுற்று மாளிகை வலங்கொண்டு காலனை
     யுதைத்ததுருட் டியசெய்ய
பொற்சி லம்பணி தாமரை வணங்கிமுன்
     போற்றிஉய்ந் தெதிர்நின்று
பற்ற றுப்பவர் சடையுடை யான்எனும்
     பதிகஇன் னிரைபாடி.
பரவி ஏத்திஅங் கரிதினிற் போந்துபார்
     பரவூசீர் அரசோடு
விரவு நண்புடைக் குங்குலி யப்பெருங்
     கலயர்தம் மனைமேவிக்
கரையில் காதல்மற் றவர்அமைத் தருளிய
     விருந்தினி தமர்ந்தங்குச்
சிரபு ரத்தவர் திருமயா னமும்பணிந்
     திருந்தனர் சிறப்பெய்தி.
                      -சேக்கிழார்.