பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)09. திருவீழிமிழலை461

9.திருவீழிமிழலை

பதிக வரலாறு:

     சிவபெருமானருளால் அப்பரும், பிள்ளையாரும் பெருஞ்சோற்றுப்
பிறங்கல் ஈந்து, அனைத்துயிரும் துயர்நீங்கிப் புவனமெலாம் பொலிவு எய்தி
விளங்கச்செய்து, இறைவனைப் போற்றி வைகிய காலத்து ஒரு நாள்,
திருவாஞ்சியத்தை நினைந்தபோது பாடியருளியது இத்திருப்பதிகம் (இதன்
ஐந்தாவது திருப்பாடலை நோக்குக.)

                       பண்: காந்தார பஞ்சமம்

ப.தொ.எண்: 267   பதிக எண்: 9

                          திருச்சிற்றம்பலம்

2889. கேள்வியர் நாடொறு மோதுநல் வேதத்தர் கேடிலா
  வேள்விசெ யந்தணர் வேதியர் வீழி மிழலையார்
வாழியர் தோற்றமுங் கேடும்வைப் பாருயிர் கட்கெலாம்
ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட் கணியரே. 1


     1. பொ-ரை:கேள்வி ஞானம் உடையவர்களும், நாள்தோறும் நல்ல
வேதத்தை ஓதுபவர்களும், கெடுதலில்லாத யாகத்தைச் செய்கின்ற,
எவ்வுயிர்களிடத்தும் இரக்கமுடையவர்களுமான அந்தணர்கள், போற்றுகின்ற
வேதநாயகர் திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானேயாவார்.
அவர் ஆருயிர்கட்கெல்லாம் வினைப்பயனுக்கேற்பப் பிறப்பும், இறப்பும்
செய்வார். கடலாழம் கண்டறியவரப்படாதது போல அவருடைய தன்மை
பிறரால் அறிதற்கு அரியது. தம்முடைய திருவடிகளைப் போற்றி வணங்கும்
அன்பர்கட்கு நெருக்கமானவர்.

     கு-ரை:கேள்வியர்-பலநூல்களைக் கேட்டறிந்தவர்கள். நாள்தொறும்
ஓதும் நல்வேதத்தர்-நாள்தோறும் நல்ல வேதத்தை ஓதுபவர்கள். கேடு இலா
வேள்விசெய் அந்தணர்-கெடுதல் இல்லாத யாகத்தைச் செய்கின்ற அழகிய
கருணையையுடையவர்களாகிய வேதியர். மறையோர் வாழும்
வீழிமிழலையார்-திருவீழிமிழலையுள் எழுந்தருளியவராகிய சிவபெருமான்.
உயிர்கட்கு எல்லாம் தோற்றமும் கேடும் வைப்பார்-உயிர்களுக்கு உடம்போடு
கூடிப்