பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)13. திருப்பூந்தராய்495

2937. துங்கிய றானவர் தோற்ற மாநகர்
  அங்கியில் வீழ்தர வாய்ந்த வம்பினர்
பொங்கிய கடலணி பூந்த ராய்நகர்
அங்கய லனகணி யரிவை பங்கரே.             6

2938. அண்டர்க ளுய்ந்திட வவுணர் மாய்தரக்
  கண்டவர் கடல்விட முண்ட கண்டனார்
புண்டரீ கவ்வயற் பூந்த ராய்நகர்
வண்டமர் குழலிதன் மணாளர் காண்மினே.      7

2939. மாசின வரக்கனை வரையின் வாட்டிய
  காய்சின வெயில்களைக் கறுத்த கண்டனார்


     6. பொ-ரை: அசுரர்களின் நெடிய வடிவங்களைப் போன்ற
தோற்றத்தையுடைய பெரிய முப்புரங்களையும், நெருப்பால் அழியுமாறு செய்த
அக்கினிக் கணையை உடைய சிவபெருமான், பொங்கும் கடலையுடைய
அழகிய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
அப்பெருமான் அழகிய கயல்மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியை
ஒரு பாகமாக உடையவர். அப்பெருமானைத் தரிசித்துப் பிறவிப்பயனைப்
பெறுங்கள்.

     கு-ரை: துங்கு இயல் தானவர் தோற்றம் மாநகர் - அசுரர்களின்
தோற்றத்தையுடைய பெரிய புரங்களை. ஆய்ந்த-ஆராய்ந்து செலுத்திய.
அம்கயல் அ(ன்)ன கணி அரிவை-அழகிய கயல்மீனை ஒத்த கண்ணியாகிய
உமாதேவியார் (உடையவர்.)

     7. பொ-ரை: சிவபெருமான் எல்லா அண்டத்தவர்களும் நன்மை
அடையும் பொருட்டுத் திரிபுர அசுரர்களை மாய்த்தவர். கடலில் தோன்றிய
நஞ்சை உண்ட கருநிறக் கண்டத்தர். தாமரை மலர்கள் பூத்துள்ள
வயல்களையுடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுபவர். பூவிலுள்ள தேனை உண்ணும்பொருட்டு வண்டு
அமர்கின்ற கூந்தலையுடைய உமாதேவியின் மணாளர் ஆவார்.
அப்பெருமானைத் தரிசித்துப் பிறவிப் பயனைப் பெறுங்கள்.

     கு-ரை: மாய்தர-மாய்-பகுதி. தர-துணைவினை. கண்டவர்-செய்தவர்.

     8. பொ-ரை: சிவபெருமான் குற்றம் செய்த அரக்கனான இராவணனைக்
கயிலை மலையின்கீழ் அடர்த்தவர். கோபத்தால் பிற