3030. |
கானலில்
விரைமலர் விம்மு காழியான் |
|
வானவன் கருக்குடி மைந்தன் றன்னொளி
ஆனமெய்ஞ் ஞானசம் பந்தன் சொல்லிய
ஊனமில் மொழிவலார்க் குயரு மின்பமே. 11 |
திருச்சிற்றம்பலம்
11.
பொ-ரை: கடற்கரைச் சோலைகளில் நறுமணம் கமழும் மலர்கள்
நிறைந்த சீகாழியில் அவதரித்த, வானவர் தொழுதெழு திருக்கருக்குடி
என்னும் திருத்தலத்திலுள்ள சிவனொளியே தானான மெய்ஞ்ஞான சம்பந்தன்
அருளிய குற்றமில்லாத இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குப் பேரின்பம்
மிகும்.
கு-ரை:
மைந்தன் - சம்பந்தன். சிவனொளியே தான் ஆன மெய்ஞ்
ஞானசம்பந்தம் பெற்ற வலிமையோடு கூடியவன்.
ஆளுடைய
பிள்ளையார் திருவந்தாதி
மொழிவது
சைவ சிகாமணி மூரித் தடவரைத்தோள்
தொழுவது மற்றவன் தூமலர்ப் பாதங்கள் தாமங்கமழ்ந்
தெழுவது கூந்தலம் பூந்தா மரைஇனி யாதுகொலோ
மொழிவது சேரி மூரிப்புதை மாதர் முறுவலித்தே.
|
|
வலிகெழு
குண்டர்க்கு வைகைக் கரை அன்று வான்கொடுத்த
கலிகெழு திண்டோட் கவுணியர் தீபன் கடல்உடுத்த
ஒலிதரு நீர்வைய கத்தை உறையிட்ட தொத்துதிரும்
மலிதரு வார்பனி யாம்மட மாதினை வாட்டுவதே. |
|
நகரங்
கெடப்பண்டு திண்தேர் மிசைநின்று நான்மறைகள்
பகரங் கழலவ னைப்பதி னாறா யிரம்பதிகம்
மகரங் கிளர்கடல் வையந்துயர்கெட வாய்மொழிந்த
நிகரங் கிலிகலிக் காழிப் பிரானென்பர் நீணிலத்தே.
-நம்பியாண்டார் நம்பிகள்.
|
|