பக்கம் எண் :

58மூன்றாம் திருமுறையின்உரைத்திறம் 

     16. ஒருவன் - 43-10

     ஒருவன் என்னும் ஒருவன் காண்க.

     17. கடவுள்-எவற்றையும் கடந்தவர் - 48-1

     கடவுளே போற்றி.

     18. அங்கணன் - 51-7, 92-9

     அங்கணன் கையில் காக்கும்.

     19. சாமவேதன் - 56-2

     சங்கரன் சாமவேதி.

     20. அழகன் - 75-1

     அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே.

     21. பகவன்-ஐச்வரியம் முதலிய ஆறு குணமுடையவன் - 75-5

     ஆடல் பிரியாத பரமேட்டி பகவன்

     22. சிட்டன்-சீலத்தை விரும்புவோன் - 86-8

     சிட்டனே! சிவலோகனே!

     23. பண்டரங்கன் - 102-1

     திருத்தோணிபுரத்துறையும் பண்டரங்கன்.

     24. பொய்யிலி - 104-11

     பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.

     25. சைவனார் - 118-3

     தார் உறு கொன்றை தம்முடி வைத்த சைவனார்