|
முதலியவாகப்
பலபெயர்கள் சிவபெருமானுக்கு உரியனவாக
மேற்கோள்களுடன் சுட்டப்பட்டுள்ளன.
5. அணிகளைச் சுட்டுதல்
ஆங்காங்கு இத்திருப்பாடல்களில் காணப்படும் அணிகளைச்
சுட்டிச்
செல்வதும் இவருக்கு வழக்கம்.
எண்ணலங்காரம் - 71-6, 122-6
வீறுகோளணி - 70-4, 75-4
திரிபதிசய அணி - 75-3
மிகைஉயர்வுநவிற்சியணி - 83-8
தற்குறிப்பேற்ற அணி - 89-3
குறிப்பு உருவக அணி - 116-7
ஏகதேச உருவக அணி - 125-1
பலபொருளுவமை அணி - 2-4
முதலிய பல அணிவகைகள் இவ்வுரையில் இடம் பெற்றுள்ளன.
6. புராணங்களைச் சுட்டுதல்
பெரியபுராணம் 18-2, 24-11, 32-11, முதலிய இடங்களிலும்
கந்தபுராணம் 78-1, 100-8, 106-10 முதலிய இடங்களிலும்
பொதுவான சிவபுராணம் 7-2 முதலிய இடங்களிலும்
திருவானைக்காப்புராணம் 53-3, 100-8 முதலிய இடங்களிலும்
திருவாரூர்ப்புராணம் 54-9 முதலிய இடங்களிலும் குறிப்பிடப்
பட்டுள்ளன.
|