பக்கம் எண் :

60மூன்றாம் திருமுறையின்உரைத்திறம் 

7. திருவாசகம், திருக்கோவையார் - மேற்கோள்

     இவ்வுரையாசிரியர் ஏனைய உரையாளர்கள் போலவே, சங்க
இலக்கியம், மணிமேகலை, சிந்தாமணி, திருக்குறள், நாலடியார், திருமுறைகள்
இவற்றிலிருந்து பல மேற்கோள்கள் காட்டும் இயல்பினர். எனினும்
திருவாசகம், திருக்கோவையார் என்ற தெய்வப்பனுவல் களிலிருந்து
பலமேற்கோள்களை இவர் குறிப்பிடும் செயல் இவ்வுரையில் தொட்ட
தொட்ட இடங்களிலெல்லாம் காணப்படுவதாகும்.

     திருவாசகத்தொடர்கள் மேற்கோள் காட்டப்பட்ட இடங்களை மாத்திரம்
சுட்டித் திருக்கோவையாரின் தொடர்களையும் அவை மேற்கோள்
காட்டப்பட்ட இடங்களையும் நோக்குவோம்.

திருவாசக மேற்கோள்கள்:

     4-4, 6-3, 16-1, 20-4, 21-5, 24-8, 26-5, 32-10, 38-5, 38-8, 43-2, 49-8, 54-1, 58-5, 59-7, 62-1, 62-5, 64-10, 72-3, 79-6, 86-8, 91-11, 94-6, 97-5, முதலிய பல திருப்பாடல்களின் உரையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

திருக்கோவையார் மேற்கோள்:

     1. தேம்பல் நுண்ணிடையாள் - 2-11

     தேம்பலஞ் சிற்றிடை ஈங்கிவள் - கோவை.

     2. கொண்டிரைக் கொடியொடும் - 33-7

     கொண்ட+இரை-பெயரெச்ச விகுதி விகாரத்தால் தொக்கது,

     அறுகால் நிறைமலர் ஐம்பால் நிறை அணிந்தேன்-கோவை, போல.

     3. போழ்ந்த திங்கள் - 42-8

     போழ்ந்த-போழ்ந்தாலனைய