|
11.
தொழுது எழு பூவணத்து உறை -20-3
தொழுது
எழுவார் வினைவளம் நீறெழ - கோவை என்பன போன்ற
திருக்கோவையார் மேற்கோள்கள் இவ்வுரையில் பல உள.
8.
சொற்பொருள் விளக்கம்:
மாதவி
- இது ஒரு கொடி. மரம் என்பதும் ஆம்.
1. செருந்திபூ மாதவிப்பந்தர் வளர் செண்பகம்
- 35-5
மாதவிக்கொடி பந்தல் போலப் படர்தலால் மாதவிப்பந்தல்
என்றே
கூறப்படும்.
மாதவி மரம் என்றலும் ஒன்று.
2. செடியார் மாதவி - செடிகளோடு கூடிய மாதவிமரம்
- 55-2
மாதவி ஒருவகை மர விசேடம்.
3. மாதவி மணம் கமழ வண்டு பல பாடுபொழில் -71-5
மாதவி - மாதவிக்கொடிகள்.
4. மாதவியின் மீது அணவு தென்றல் -76-2
மாதவி மீது - மாதவி முதலிய மரங்கள் மீது.
இவற்றை நோக்க இவ்வுரையாளர் மாதவி என்பது ஒரு
கொடி
என்றோ, ஒரு மரம் என்றோ உறுதியாக முடிவு செய்யாமல் இருதிறக்
கருத்துக்களையும் ஏற்கும் இயபினராதல் பெறப்படும். அசுணம் என்பதனை
ஒரு விலங்கு என்றும் ஒரு பறவை என்றும் இருதிறத்துக் கருத்துக்கொள்வது
போல்வது இது.
மூரி-எருது-மலையாளச்சொல்-17-4
அண்ணா-தந்தையே-திசைச்சொல்-55-5
பொக்கு-பொய்-திசைச்சொல்-61-10
|