|
மறியுலாங்
கையினான் மங்கையோ டமர்விடம் செறியுளார் புறவணி திருமுது குன்றமே. 2 |
3161. |
ஏறினார் விடைமிசை இமையவர் தொழவுமை |
|
கூறனார்
கொல்புலித் தோலினார் மேனிமேல்
நீறனார் நிறைபுனற் சடையனார் நிகழ்விடம்
தேறலார் பொழிலணி திருமுது குன்றமே. 3 |
3162. |
உரையினா ருறுபொரு ளாயினா னுமையொடும் |
|
விரையினார்
கொன்றைசேர் சடையினார் மேவிடம்
உரையினா ரொலியென வோங்குமுத் தாறுமெய்த்
திரையினா ரெறிபுனற் றிருமுது குன்றமே. 4 |
கட்டி ஆடுகின்ற புண்ணிய
மூர்த்தியான சிவபெருமான், இளமான் கன்றை
ஏந்திய திருக்கரத்தை உடையவனாய், உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற
இடமானது சோலைகள் நிறைந்த அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.
கு-ரை:
பொறி உலாம் மா - புள்ளியுடை மான்தோலை. அசைத்து -
உடைத்து. செறியுள் (வளம்) செறிதல். செய்யுள், விக்குள் என்புழிப்போல,
செறியுள் - என்பதிலும் உள் தொழிற்பெயர் விகுதி. செறியுள் - மண்டிணிந்த
வன்னிலம். ஆர் - பொருந்திய புறவு.
3.
பொ-ரை: இறைவன், இடபவாகனத்தில் ஏறித் தேவர்கள் தொழுது
போற்ற, உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டு,
கொல்லும் தன்மையுடைய புலியின் தோலை ஆடையாக அணிந்து,
திருமேனியில் திருவெண்ணீறு அணிந்து, நிறைந்த கங்கையைச் சடைமுடியில்
தாங்கி வீற்றிருந்தருளும் இடமாவது, தேன் துளிகளையுடைய மலர்கள்
விளங்கும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.
கு-ரை:
உமைகூறனார் - மாதுபாதியார். நீறனார் - திருநீறு
அணிந்தவர்.
4.
பொ-ரை: இறைவன் வேதத்தால் நுவலப்படும் பொருளாக
விளங்குபவன். உமாதேவியை உடனாகக் கொண்டு நறுமணம் கமழும்
கொன்றை மலரைச் சடைமுடியில் அணிந்தவன். அப்பெருமான்
|