பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)34. திருமுதுகுன்றம்627

3163. கடியவா யினகுரற் களிற்றினைப் பிளிறவோர்
  இடியவெங் குரலினோ டாளிசென் றிடுநெறி
வடியவாய் மழுவினன் மங்கையோ டமர்விடம்
செடியதார் புறவணி திருமுது குன்றமே.         5

3164. கானமார் கரியினீ ருரிவையார் பெரியதோர்
  வானமார் மதியினோ டரவர்தா மருவிடம்
ஊனமா யினபிணி யவைகெடுத் துமையொடும்
தேனமார் பொழிலணி திருமுது குன்றமே.       6


வீற்றிருந்தருளும் இடம், பக்தர்கள் உரைக்கும் அரநாமத்தின் ஒலியென அலையோசை எழுப்பும், பெருகுகிற மணிமுத்தாறுடைய திருமுதுகுன்றம்
ஆகும்.

     கு-ரை: (சொல் வடிவாயிருப்பதோடு) சொல்லிற் பொருந்திய
பொருளும் ஆயினவன் “சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானை”
(அப்பர் பெருமான்) என்பதும் காண்க. சொல் வடிவு அம்பிகை, பொருள்
வடிவு இறைவன் என்ற திருவிளையாடற்புராணத்தோடு மாறுபாடின்மை
சிவம் சத்தி அபேதத்தாற் கொள்க. விரை - வாசனை.

     5. பொ-ரை: கனத்த குரலில் ஆண் யானையானது பிளிற, இடிபோன்ற
குரலில் கர்ச்சிக்கும் சிங்கம் செல்லும் வழிகளில், கூரிய முனையுடைய
மழுப்படை ஏந்தி, உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது
செடிகொடிகள் அடர்ந்த குறிஞ்சிப் புறவிடமான அழகிய திருமுதுகுன்றம்
ஆகும்.

     கு-ரை: பிளிற - (யானை) முழங்க, கடிய ஆயின குரல் களிற்றினை
- கடுமை உடையன ஆன குரலையுடைய அவ் யானையை. ஓர் - ஒரு.
ஆளி - சிங்கம். இடிய - இடிபோன்ற. வெங் குரலினோடு - கொடிய
குரலோசையோடு. சென்றிடும் - செல்லும். நெறி - வழிகளையுடைய -
(திருமுதுகுன்றம்) புறவணி முதுகுன்றம் என்க. வடிய - கூரிய.

     6. பொ-ரை: காட்டில் திரியும் யானையின் தோலை உரித்துப்
போர்வையாகப் போர்த்திய இறைவன், அகன்ற வானத்தில் தவழும்
சந்திரனையும், பாம்பையும் அணிந்து, உயிர்களைப் பற்றியுள்ள குற்றமான
ஆணவம் என்னும் நோயைத் தீர்த்து, அருளும் பொருட்டு