|
எண்ணினா
னீரைந்து மாலையு மியலுமாப்
பண்ணினாற் பாடுவார்க் கில்லையாம் பாவமே. 11 |
திருச்சிற்றம்பலம்
மூன்றும் ஒன்றுபட வழிபட்டு,
சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன்
அருளிய இத்திருப்பதிகத்தைப் பண்ணிசையோடு பாடவல்லவர்களின்
பாவம் நீங்கும்.
கு-ரை:
இயலுமாப் பண்ணினால் பாடுவார் கோழைமிடறாகக் கவி கோளுமில வாக இசை கூடும் வகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொல் மகிழும் ஈசன் (தி.3 ப.71.பா.1.) ஒப்பிடுக.
பதிகக் குறிப்பு முதுகுன்றம் என்பதற்கேற்ப 1,5,7 இப்பாடல்களிற் குறிஞ்சி நில வருணனை
கூறப்படுகிறது.
திருஞானசம்பந்தர்
புராணம்
மொய்கொள்
மாமணி கொழித்துமுத் தாறுசூழ்
முதுகுன்றை
அடைவோம் என்
றெய்து சொன்மலர் மாலைவண் பதிகத்தை
இசையொடும்
புனைந்தேத்திச்
செய்த வத்திரு முனிவரும் தேவரும்
திசையெலாம்
நெருங்கப்புக்(கு)
ஐயர்சேவடி பணியும்அப் பொருப்பினில் ஆதர
வுடன்
சென்றார்.
|
|
தாழ்ந்தெ ழுந்துமுன் முரசதிர்ந் தெழும்
எனுந்
தண்டமிழ்த் தொடைசாத்தி
வாழ்ந்து போந்தங்கண் வளம்பதி அதனிடை
வைகுவார்
மணிவெற்புச்
சூழ்ந்த தண்புனல் சுலவுமுத் தாற்றொடு
தொடுத்தசொல்
தொடைமாலை
வீழ்ந்த காதலாற் பலமுறை விளம்பியே
மேவினார்
சிலநாள்கள்.
-சேக்கிழார்.
|
|