பக்கம் எண் :

64மூன்றாம் திருமுறையின்உரைத்திறம் 

     தலையல் - மழைபெய்தல்-84-11

     கங்காளம்-முழு எலும்புக்கூடு-93-6

     துயர்-உள்ளம் பற்றிய நோய்-94-4

     பிணி-உடலம் பற்றிய நோய்-94-4

     நைதல்-உருகுதலுக்கு முன் உறும் நிகழ்ச்சி-97-5

     முதலியன அருமையான சொற்பொருள் விளக்கங்களாம்.

9. இருவகையாகப் பொருள்கோடல்

     2-3 பஞ்சினேரடி-பஞ்சின் ஏர் அடி, பஞ்சின் நேரடி.

     இன்-ஐந்தன் உருபும் தவிர்வழி வந்த சாரியையும் ஆம்.

     பஞ்சைப் போன்ற மெத்தென்ற அழகிய அடி, பஞ்சினை ஒத்த அடி
-என இருவகையாகப் பொருள் செய்யலாம்.

     3-1. அமர்ந்தவனே! நிறைமதி அருளினனே

     அமர்ந்தவராகிய நீரே எனக்கு நிறைமதி அருளினீர் ஆவீர்-
இடவழுவமைதி. இனி, அமர்ந்தவன் எவனோ அவனே எனக்கு நிறைமதி
அருளினவனும் ஆவன் என்றும் பொருள் செய்யலாம்.

     3-3. நின்மலன்- இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன். தன்னைச்
சார்ந்த ஆன்மாக்களின் மலத்தை ஒழிப்பவன் என்பதும் ஆம்.

     10-6. பனை இலங்கும் முடி.

     முரசம் போன்ற தலை. பருத்து விளங்கும் முடி என்றும் கூறலாம்.

     13-4. பாகு அமர் மொழி - வெல்லப்பாகு போன்ற இனிமை
பொருந்திய சொல். பாகம் ஆர் மொழி என்று பாடம் ஓதின் இனிமை
தங்கிய மொழி என்பது பொருள்.