|
66-11.
உண்டு உடுப்பில் வானவர்
அமுத உண்டியை உண்டு தோயாப்பூந்துகில் உடுத்தலால்
சிறந்ததேவர்.
இல் என்பதற்கு இல்லாத என்று பொருள்கூறி மானிடரைப்
போல
உண்டலும் உடுத்தலும் இல்லாத தேவர் என்றும் பொருள் செய்யலாம்.
78-2. துற்பரிய நஞ்சு
துற்று - உண்டி. துற்பு - உண்ணல். உண்ணுதற்கரிய
நஞ்சு.
துன்னுதல் துன்பு - துற்பு எனக்கொண்டு அண்டுதற்கு
அரியவிடம்
என்றும் பொருள் கூறலாம்.
இவ்வாறு இருவகையாகச் சொற்றொடர்களுக்குப் பொருள்
கொள்ளும்
இடங்கள் இ்வ்வுரையில் பலப்பல உள்ளன.
10.
உரையில் காணப்படும் நயமான இடங்களுள் சில.
1-1.
பல்சடைப் பனிகால்கதிர் வெண்திங்கள் சூடினாய்
பல்சடை எனப் பன்மையும், புன்சடை எனக் குறுமையும்
நீள்சடை
என நெடுமையும் பொன்சடை என நிறமும் விரிசடை எனப் பரப்பும்
நிமிர்சடை என உயர்ச்சியும் பிறவும் திருமுறையுள் காணப்படும்.
நறுங்கொன்றை நயந்தவனே மந்திரங்களுள் சிறந்ததாகிய
பிரணவ
மந்திரத்துக்கு உரிய தெய்வம் தாமே எனத்தெளியச் செய்யக் கொன்றை
மாலை அணிந்தனர். அம்மலர் உருவிலும் பிரணவ வடிவமாயிருத்தலின்
பிரணவ புட்பம் எனப்படும்.
1-6. உமை ஆகம் தோய்பகவா! பலியேற்றுழல் பண்டரங்கா
பகவா-பகவனே! ஐசுவரியம், வீரியம், ஞானம், புகழ்,
திரு, வைராக்கியம் என்னும் இவ்வாறு குணங்களும் உடையவன் பகவன்.
அது சிவபெருமானையன்றி மற்று எவரையும் குறிக்காது. திரிபுர தகனம்
செய்த மகிழ்ச்சியால் தேரே நாடகமேடையாக நின்று
|