பக்கம் எண் :

66மூன்றாம் திருமுறையின்உரைத்திறம் 

     சிவபெருமான் ஆடிய கூத்தினைப் பாண்டரங்கம் என்பர். அது
‘திரிபுரம் எரிந்த விரிசடைக்கடவுள் தேரே அரங்கமாக ஆடிய கூத்தே
பாண்டரங்கமே’ என்பதனால் அறிக.

     1-8. தீயின் ஆர்கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய்
     தீயின் ஆர்கணையால் - தீயாகிய அம்பினால், திரிபுரம் எரித்த
அம்பின் நுனிப்பாகம் தீயாய் இருந்தமையால், தீயின் ஆர்கணை
எனப்பட்டது. அம்பின் அடிப்பாகம் காற்று, நுனி தீ அம்பு திருமால்
என்பவற்றை 1-11-6 ஆம் வீழிமிழலைப் பாசுரத்தில் காண்க.

     5-5. நுந்தம் மேல்வினை ஓட வீடுசெய் எந்தை

     மேல்காலப்பொருளில் முற்பிறப்புக்களில் ஈட்டி எஞ்சிய சஞ்சித
வினையையும், இடப்பொருளில் இனி ஈட்டும் வினையாகிய ஆகாமிய
வினையையும் குறிக்கும்.

     13-8. மாசின அரக்கனை வரையின் வாட்டிய காய்சின எயில்களைக்
கறுத்த கண்டனார்

     மாசு+இன்+அ அரக்கன் - பாவத்தை உடைய பாவியாகிய இராவணன்.
அடுத்த அடியில் காய்சினம் எனவருதலால் முதலடியிலும் சினமே என்று
பிரித்தல் சிறப்புடைத்தன்று.

     27-6. பாங்கினான் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை வாங்கினார்

     வெஞ்சிலை - விரும்பத்தக்க மேருமலை. தேர் ஆதற்கு இயைபில்லாத
பூமியும், அம்பு ஆதற்கு இயைபு இல்லாத திருமாலும் குதிரை ஆதற்கு
இயைபு இல்லாத வேதமும் முறையே தேரும் அம்பும் குதிரைகளும்
ஆனாற்போல, வில் ஆதற்கு இயைபு இல்லாத மலை வில்லாயிற்று என்பது.
கொடியவில் என்பதன்கண் பொருள் சிறவாது.

     32-6. வெய்யவன் பிணிகெட

     கொடிய கடிய பிணி நீங்க. துன்புறுத்தலால் வெய்யபிணி எனவும்
எளிதில் நீங்கப்பெறாமையால் வன்பிணி எனவும் கூறப்பட்டது.

     33-7. பண்டு இரைத்துத் தோத்திரம் சொல