|
இரைத்து
- மகிழ்ச்சியால் ஆரவாரித்து. மந்திரத்தைப் பிறர்காதில்
படாதவாறு உச்சரிக்க. தோத்திரம் பிறரும் கேட்குமாறு ஓசையோடும் பாடுக
என்பது ஆகமவசனக்கருத்து என்ப.
46-2. கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர் அமுதர்
கம்- மணம், வெண்மை. முதல் - உவகை. அமுதம் மணமும்
வெண்மையும் உவகை செய்தலும் உடையது. கமுதமுல்லை - மணமும்
வெண்மையும் உவகை செய்தலும் முல்லைக்கும் உரியன.
59-1. அரவிரி கோடல்
பாம்பைப் போலத் தண்டோடு மலர் விரிந்த காந்தட்செடிகள்.
காந்தள்தண்டு பாம்பின் உருவிற்கும் அதன் பூ விரிதல்
படத்திற்கும்
உவமை.
59-4. வேங்கை உரி ஆர்த்து
இறைவனுக்குப் புலித்தோல் உடையும் கரித்தோல்
போர்வையும்
சிங்கத்தோல் ஏகாசமுமாம் என்பர்.
88-2. இலகு இணை மரவடியினர்
மரவடி-மரத்தாலாகிய பாதுகை.
பிட்சாடன மூர்த்தியின் கோலத்தில் இதனைத் தரித்திருப்பவன்
என்பதை அடியில் தொடுத்த பாதுகையும் என்ற காஞ்சிப் புராணப்
பாடலான் அறிக.
92-11. அருந்தமிழ்மாலைகள் பாடியாடக் கெடும் அருவினையே
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முத்தமிழ் விரகர்
ஆகையால்
அவர் அருளிய பாடல்கள் இயற்றமிழ்ப்பாடல்களே அன்றிப் பாடுதற்குரிய
இசைப்பாடல்களாகவும் ஆடுதற்குரிய பாடல்களாகவும் உள்ளன என்பது
இங்குக் குறித்தவாறு.
98-5. பால் நிகர் உருவுடையீரே
|