|
சதாசிவ
மூர்த்தியின் நிறம் வெண்மை என்பதால் பால் நிகர்
உருவுடையீர் எனப்பட்டது.
102-3, 109-11, 112-5, 120-7 முதலியனவும் காண்க.
11.
சாத்திரக் கருத்துக்கள்
2-10.
முன்வினைப் பயனால் புறமதத்தில் பிறந்து அதன் பயனாகச்
சிவபெருமானைப் பழித்துரைத்து மேலும் தீவினைக்கே முயல்கின்றனர்.
அவ்வாறு அவர்கள் செய்வது கர்மவசத்தினால் ஆவது எனினும் அதுவும்
சிவன் செயலே என்று உணர்த்துவார். ஆக்கினான் என இறைவன்
மேல்வைத்து ஓதினார்.
3-7. அடியவர்கள் இருவினை ஒப்பு, மலபரிபாகம்,
சத்திநிபாதம்
முறையே எய்திச் சிவப்பேறு அடைவர் என்க.
9-1. உலகத்திற்குச் சிருட்டிகருத்தரும் சங்கார
கருத்தரும் ஆவர்
எனவே இரட்சக கருத்தரும் சிவபெருமான் ஒருவரே என்க. படைப்போற்
படைக்கும் பழையோன், படைத்தவை காப்போற் காக்கும் கடவுள், காத்தவை
கரப்போன் என வரும் சுருதி வாக்கியங்களான் அறிக. (திருவாசகம்)
21-6. உலகமாகிய காரியத்துக்கு இறைவன் நிமித்த
காரணமாம்
தன்மையை அறிந்து ஏத்தும் இக்கருத்தை கோலத்தாய்! அருளாய்!
உன்காரணம் கூறுதுமே அன்பர்க்கு என்னும் இத்திருமுறை முதற்பதிகத்தும்
காண்க.
22-9. இப்பதிகம், இருவரும் காணாதசேவடி என்று மட்டும்
குறிக்கிறது.
திருமாலால் காணமுடியாத அடி பிரமனாலும் காண முடியாது என்பதாம்.
அடியே காணாதார் முடி காணமாட்டாமையும் பெறப்பட வைத்தமை அறிக.
25-11. திருநீறு ஒன்றையே பொருளாகக்கொண்டு முத்தி
அடைந்தவர்
ஏனாதிநாதனார். சடைமுடி ஒன்றே காரணமாக எரியில் புகுந்து உயிர்நீத்து
முத்தியுற்றவர் புகழ்ச்சோழ நாயனார். திருநீறு முதலிய அனைத்தும் கூடிய
வேடத்தைப் பொருளென்று கொண்டு முத்திபெற்றவர் மெய்ப்பொருள்
நாயனார்.
26-1. திரவிய சுத்தியின் பொருட்டு அஸ்திரமந்திரத்தால்
நீர்
|