பக்கம் எண் :

70மூன்றாம் திருமுறையின்உரைத்திறம் 

12. அடக்கம்

     77-1. உதவிமாணிகுழி என்று அடைமொழியோடு இணைத்தே
கூறப்படுகின்ற காரணம் விசாரித்து அறியத்தக்கது.

     46-3. இதில் உள்ளதொரு வரலாறு விளங்கவில்லை.

     114-6. நான்காவது அடியின் பொருள் விளங்கவில்லை.

     என்பன போன்ற தொடர்கள் இவருடைய நேர்மையான புலமைக்கு
எடுத்துக்காட்டாகும்.

     இத்தகைய நலன்கள் சான்ற குறிப்புரையை மூன்றாம் திருமுறைக்கு
வரைந்து நமக்கு உதவியுள்ள இப்பெருமகனாரின் நினைவு நன்மக்கள்
உள்ளத்தில் என்றும் நிலைபெற்றிருக்கும் என்பது உறுதி.

     இவ்வரிய குறிப்புரையைக் கற்பார் நலன் கருதிப் பொழிப்பு
உரையோடும் வெளியிட்டருளும் நம் குருமகா சந்நிதானத்தின் நிர்ஹேதுக
கிருபைக்குத் தலையாய கைம்மாறு இலேம் யாம்.

          திருமுறை கண்ட புராணம்
அருமறையைச் சிச்சிலிபண் டருந்தத் தேடும்
     அதுபோலன் றிதுஎன்றும் உளதாம் உண்மைப்
பரபதமும் தற்பரமும் பரனே அன்றிப்
     பலரில்லை என்றெழுதும் பனுவல் பாரின்
எரியினிடை வேவா(து)ஆற் றெதிரே யோடும்
     என்புக்கும் உயிர்கொடுக்கும் இடுநஞ் சாற்றும்
கரியைவளை விக்குங்கல் மிதக்கப் பண்ணுங்
     கராமதலை கரையிலுறக் காற்றுங் காணே.
                             - உமாபதி சிவம்.